வடக்கு, கிழக்கு பொலிஸ் நிலையங்களின் அறிவிப்பு பலகைகளில் இனி தமிழிற்கே முதலிடம்: அதிரடி உத்தரவு!


வடக்கு கிழக்கிலுள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களின் பெயர்ப்பலகைகளிலும் தமிழ் மொழிக்கு முன்னுரிமையளிக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி, பெயர்ப்பலகைகளில் இனி தமிழில் எழுதப்பட்ட வாசகமே முதலில் இருக்கும்.

பதில் பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில், பிரதிப் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய இதற்கான உத்தரவை விடுத்துள்ளார்.

கடந்த ஆட்சியின் அரசகரும மொழிகள் ஆணைக்குழு விடுத்த பரிந்துரையின் அடிப்படையிலான நடவடிக்கை இது என தெரிவிக்கப்படுகிறது.

செப்ரெம்பர் 6ம் திகதி அரச கரும மொழிகள் ஆணைக்குழுவினால் சட்டம் ஒழுங்கு அமைச்சின் செயலாளரிற்கு இதற்கான பரிந்துரை வழங்கப்பட்டிருந்தது. இதன் நகல் பதில் பொலிஸ்மா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இதனடிப்படையில் இந்த புதிய உத்தரவு இடப்பட்டுள்ளது.

தமிழ் மக்கள் அதிகளவில் வாழும் வடக்கு, கிழக்கில் அரச கரும மொழிகளில் ஒன்றான தமிழே, பெயர்ப்பலகைகளில் முன்னுரிமை பெற்றிருக்க வேண்டுமென அரச கரும மொழிகள் ஆணைக்குழு பரிந்துரைத்திருந்தது.

பொலிஸ் என குறிப்பிடாமல் காவல்த்துறை என தமிழில் குறிப்பிடும்படி அரசகரும மொழிகள் ஆணைக்குழு பரிந்துரைத்திருந்தது. இதன்படி, அறிவித்தல் பலகைகளில் இனிமேல் குறிப்பிடப்படுமென தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here