எல்லோரும் படுக்கைக்கு அழைத்ததால் நடிப்பதையே நிறுத்திய நடிகை!


தனுஸ்ரீதத்தா, கங்கனா ரணாவத், ஜீனத் அமன் உள்ளிட்ட இந்தி நடிகைகள் பலர் இயக்குனர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறி உள்ளனர்.

தற்போது நடிகை மஞ்சரி பட்நிஸ் என்பவரும் பாலியல் புகார் கூறியுள்ளார். இவர் பரோட் ஹவுஸ், சினா இஜிகா நாம் ஹேய் உள்ளிட்ட இந்தி படங்களில் நடித்து இருக்கிறார்.

தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆரின் சக்தி படத்தில் நடித்தார். அதன்பிறகு படங்களில் நடிக்கவில்லை.

இதுகுறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு:-

“நான் தெலுங்கில் கடைசியாக சக்தி படத்தில் நடித்தேன். அந்த படம் வெற்றிகரமாக ஓடியது. எனக்கும் நிறைய பட வாய்ப்புகள் வந்தன. ஆனாலும் நான் நடிக்கவில்லை. என்னை புதிய படங்களில் நடிக்க அழைத்த இயக்குனர்கள் எல்லோருமே தங்களுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ளும்படி கட்டாயப்படுத்தினர்.

ஆசைக்கு இணங்கினால்தான் வாய்ப்பு தருவோம் என்றனர். இதனால் மன உளைச்சலுக்கு உள்ளானேன். என் திறமை மீது நம்பிக்கை உள்ளது. படுக்கையை பகிர்ந்து வாய்ப்பு பெற வேண்டும் என்ற அவசியம் இல்லை. இதனால் தெலுங்கு படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டேன். சினிமா பின்னணி இல்லாமல் ஜெயிப்பது கஷ்டம்.”

இவ்வாறு அவர் கூறினார். மஞ்சரியை படுக்கைக்கு அழைத்த இயக்குனர்கள் யார் என்று தெலுங்கு பட உலகில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here