யாழ் மேலதிக அரச அதிபர் இடமாற்றம்: கட்சி ஆதரவாளர்கள் மல்லுக்கட்டல்!

யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரனிற்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

அவர் முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று (10) அவருக்கான இடமாற்ற கடிதம் வழங்கப்பட்டுள்ளது.

இது சாதாரண நிர்வாக நடைமுறையென அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.

இதேவேளை, இந்த இடமாற்றம் அரசியல் கட்சிகளின் சமூக வலைத்தள ஆதரவாளர்களிற்கிடையில் மோதலை ஏற்படுத்தியுள்ளது. அவரது இடமாற்றம் அரசியல் ரீதியானது என தமிழ் அரசு கட்சி ஆதரவாளர்கள் குறிப்பிட்டு வருகின்றனர். எனினும், அவர் தமிழ் அரசு கட்சியின் பிரமுகர் ஒருவருக்கு நெருக்கமாக இருந்தார் என ஈ.பி.டி.பி தரப்பினர் சுட்டிக்காட்டி வருகிறார்கள்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here