ரணிலே தலைவர்: ஐ.தே.க செயற்குழுவில் முடிவு!

0

ஐக்கிய தேசியக்கட்சியின் முக்கிய பதவிகளில் மாற்றம் செய்யும் நோக்கத்துடன் இன்று சிறீகோத்தாவில் கூடிய, கட்சியின் செயற்குழு கூட்டத்தில்- ரணில் விக்கிரமசிங்கவே தொடர்ந்து கட்சி தலைவராக செயற்படுவார் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கட்சியின் தலைமைப் பதவியில் மாற்றங்கள் செய்யாதிருக்க பெரும்பான்மையான கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் மத்திய செயற்குழு உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர், இந்த சந்தர்ப்பத்தில் இந்த மாற்றம் தேவையில்லை என்று தீர்மானிக்கப்பட்டதாக அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் கூறியுள்ளார்.

அதேவேளை ஐக்கிய தேசிய கட்சியின் உயர் பதவிகளில் மாற்றங்களை செய்வது தொடர்பாக பரிந்துரைகளை வழங்குவதற்கு குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

அந்தக் குழுவில் ஐக்கிய தேசிய கட்சியின் அமைச்சர்கள் 11 பேரும் அந்தக் கட்சியின் 03 பாராளுமன்ற உறுப்பினர்களும் உள்ளடங்குவதாக அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் கூறியுள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here