டெல்லி டேர்டெவில்ஸ்: ரபாடாவுக்கு பதிலாக இங்கிலாந்து வீரர் பிளங்கட்!

தென்னாபிரிக்கா வேகப்பந்துவீச்சாளர் காகிசோ ரபாடா காயம் காரணமாக ஐபில் போட்டியில் இருந்து விலகியதைத் தொடர்ந்து, அவருக்கு பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் லியாம் பிளங்கட் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்று டெல்லி டேர்டெவில்ஸ் அணி தெரிவித்துள்ளது.

11-வது ஐபிஎல் போட்டித் தொடரில் டெல்லி டேர்வெலிஸ் அணிக்காக தென்னாபிரிக்க வேகப்பந்துவீச்சாளர் காகிசோ ரபாடா ரூ.4.2 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டு இருந்தார். ஆனால், சமீபத்தில் நடந்த அவுஸ்திரேலியாவுக்கு எதிராக ஜோகன்ஸ்பர்க் நகரில் நடந்த 4-வது டெஸ்ட் தொடரில் ரபாடா காயமடைந்தார்.

அவரை பரிசோதனைச் செய்த மருத்துவர்கள், ரபாடாவுக்கு முதுகுப்பகுதியில் பிடிப்பு இருப்பதால், 3 மாதங்கள் சிகிச்சை எடுக்கவேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். இதையடுத்து, ஐபிஎல் போட்டியில் இருந்து விலகுவதாக ரபாடா அறிவித்தார்.

இந்நிலையில், அனுபவ வீரர் ரபாடாவுக்கு பதிலாக யாரை தேர்வு செய்யலாம் என்று குழப்பத்தில் இருந்த டெல்லி டேர்டெவில்ஸ் அணி, இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் லியான் பிளங்கட்டை தேர்வு செய்துள்ளது.

இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் லியான் பிளங்கட் இதுவரை 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார், 65 ஒருநாள் போட்டிகளிலும், 12 டி20 போட்டிகளிலும் பங்கேற்றுள்ளார். தற்போது ஐபில் போட்டியில் பதிவு செய்து காத்திருக்கும் வீரர் பட்டியிலில் இருந்து பிளங்கட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து டெல்லி டேர்டெவில்ஸ் அணி ட்விட்டரில் வெளியிட்ட அறிவிப்பில், ‘காயம் காரணமாக அணியில் இருந்து விலக்கிக் கொண்ட ரபாடாவுக்கு பதிலாக, டெல்லி டேர்டெவில்ஸ் அணியில் இங்கிலாந்து வீரர் லியாம் பிளங்கட் சேர்க்கப்பட்டுள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறோம். அனுபவம் வாய்ந்த பிளங்கட், சிறப்பாக செயல்படக்கூடியவர். விரைவில் அணியில் பிளங்கட் இணைவார்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொஹாலியில் நாளை நடைபெறும் முதல் ஆட்டத்தில் கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணியை எதிர்கொள்கிறது டெல்லி டேர்டெவில்ஸ் அணி என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here