கோட்டா வழியில் சாதாரண பயணிகள் முனையத்தால் சென்ற துமிந்த!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை தொடர்ந்து அமைச்சர் துமிந்த திசநாயக்க சமூக வலைத்தளங்களில் வைராலாகி வருகிறார்.

இன்று (8) கட்டுநாயக்க விமான நிலையத்தின் சாதாரண பயணிகள் முனையத்தின் ஊடாக அவர் பயணமாகியிருந்தார்.

இளைஞர் விவகார அமைச்சர் துமிந்தா திசானநாயக்க, கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக இன்று நேபாளம் பயணமானார். ஏற்கனவே கோட்டாபய சாதாரண பயணிகள் முனையத்தின் ஊடாக பயணித்திருந்த நிலையில், இன்று துமிந்த திசநாயக்கவும் சாதாரண பயணிகள் முனையத்தின் ஊடாக பயணமானார்.

அடுத்த தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளை இலங்கை நடத்தவுள்ளது. இதற்கான இலங்கைக்கான உத்தியோகபூர்வ கொடியை நேபாளத்தில் பெற்றுக்கொள்வதற்காக அவர் பயணமாகியுள்ளார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here