வெள்ளை வானில் கடத்தப்பட்ட சுவிஸ் தூதரக பெண் பணியாளர் சிஐடியில் வாக்குமூலமளித்தார்!

வெள்ளை வாகனத்தில் கடத்தப்பட்டதாக குறிப்பிடப்படும் சுவிஸ் தூதரகத்தின் பெண் பணயாளர் இன்று சிஐடியில் வாக்குமூலமளித்தார்.

கனியா சில்வெஸ்டர் பிரான்சிஸ் என்ற அந்த பெண் பணியாளர் தனது இரண்டு சட்டத்தரணிகள் மற்றும் தூதரக அதிகாரிகளுடன் குற்றப் புலனாய்வுத்துறைக்கு சென்று வாக்குமூலமளித்தார்.

மாலை 4.30 மணியளவில் வாக்குமூலமளிக்க சென்றவர், இரவு 7 மணிக்கு அங்கிருந்து வெளியேறினார். அவர் சட்ட வைத்திய அதிகாரியிடம் அவர் அனுப்பப்பட்டார்.

அவரது உடல்நிலை குறித்த மருத்துவ அறிக்கையை பெற்றுக்கொள்ளும் நோக்கத்துடன், சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கை பெறப்பட்டுள்ளது.

நவம்பர் 25 ம் திகதி வேலை முடிந்து வீடு திரும்பும் வழியில், வெள்ளை வாகனத்தில் அவர் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here