டில்லியில் பயங்கரத் தீ விபத்து: 35 பேர் பலி

டில்லி ஜான்சி ராணி வணிகப் பகுதியில் அமைந்துள்ள அனாஜ் மண்டி எனும் தொழிற்சாலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 35 பேர் உயிரிழந்துள்ளதாக டில்லி போலீஸார் தெரிவித்தனர்.

இதனால் அப்பகுதியில் சூழ்ந்த புகை காரணமாக பலருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளதாகவும் போலீஸார் கூறினர்.

இந்நிலையில், தீ விபத்து தொடர்பாக தகவலறிந்து உடனடியாக அப்பகுதிக்கு வந்த தீயணைப்புத்துறை, 30க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களுடன் போராடி தீயை அணைத்தது. இந்த விபத்தில் இருந்து 50 பேர் வரை மீட்கப்பட்டு, அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த தீ விபத்தில் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. மின்கசிவுக் காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்காலம் என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here