ஜப்பானில் திருமணமாகாதவர்கள் ஜோடியை கண்டுபிடிக்க பிரமாண்ட நிகழ்வு!


வர்த்தக, புத்தக கண்காட்சிகளை பார்த்திருப்பீர்கள். ஆனால், திருமணத்திற்கான ஜோடியை கண்டபிடிப்பதற்கான பிரமாண்டமான விருந்து நிகழ்வை அறிந்திருக்கிறீர்களா?

ஆம். இது ஜப்பானில் நடந்தது.

ஜப்பானில் திருமணமாகாமல் தனிமையில் இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 20 முதல் 49 வயது வரையான ஜப்பானியர்களில் கால்பங்கினர் தனிமையில் உள்ளதாக அந்த நாட்டு புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த வயதிற்குட்பட்டவர்கள் வழக்கமாக திருமணம் செய்து கொள்ள விருப்பம் கொண்டிருந்தாலும், காலாவதியான சமூக அணுகுமுறைகள் மற்றும் பொருளாதார அழுத்தம் அதிகரிப்பது போன்ற காரணங்களினால் தனிமையை நாடுவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

டோக்கியோவின் சூவோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சமூகவியல் பேராசிரியர் மசாஹிரோ யமதா, தங்கள் நிலைமைகளை பூர்த்தி செய்யாத ஒருவருடன் உறவை ஏற்படுத்துவது நேரத்தை வீணடிப்பதாக அவர்கள் நினைக்கிறார்கள். கணவன் அல்லது மனைவியுடன் நீண்டகால நிதிப் பாதுகாப்பு முக்கியமானதாகக் கருதப்பட்டாலும், மலிவு விலை வீடுகளைக் கண்டுபிடிப்பதில் உள்ள சிரமம் அம்மா மற்றும் அப்பாவுடன் தங்குவதற்கான ஊக்கத்தை அதிகரிக்கிறது, என்றார்.

இதையடுத்து, திருமணமாகாதவர்கள், தங்களது ஜோடியை கண்டறிய இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அங்கு வருபவர்கள் பெற்றோர் அல்லது பாதுகாவலருடன்தான் வர வேண்டும். தமது சுயவிபர கோவையும் கொண்டு வர வேண்டும்.

அங்கு வருபவர்கள் பரஸ்பரம் பேசி, தமது ஜோடியை தீர்மானிக்க வசதியாக இந்த ஏற்பாடு. பரஸ்பர அறிமுகத்துடன், தமது சுயவிபர கோவைகளை பரிமாறிக் கொள்வார்கள்.

தனது தாயுடன் அங்கு வந்திருந்த 38 வயதான பெண்ணொருவர், தாயை பிரிந்திருக்க முடியாமல் இதுவரை திருமணம் செய்யாமலிருந்ததாக கூறினார்.

அத்துடன், “ஒருவரைச் சந்திக்க எனக்கு பல நல்ல வாய்ப்புகள் கிடைக்கவில்லை. எனது பணியிடத்தில் நிறைய பெண்கள் உள்ளனர், ஆனால் பல ஆண்கள் இல்லை.”என இன்னொரு பெண் குறிப்பிட்டார்.

விருந்தில் 74 வயதான ஒருவர், தனது 46 வயது மகனுக்கு பொருத்தமான மணமகளைத் தேடும் வேளையில்,

“என் மகன் ஒரு விற்பனையாளர். அவர் வாடிக்கையாளர்களைக் கையாள்வதில் நல்லவர், ஆனால் பெண்களைப் பொறுத்தவரை அவர் மிகவும் தயங்குகிறார்” என்றார்.

தனது மகன் வேலையில் பிஸியாக இருந்ததால் திருமணத்தை யோசிக்கவில்லையென்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here