ஈராக்கில் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு: 16 பேர் பலி; 47 பேர் காயம்!

ஈராக்கில் அடையாளம் தெரியாத ஒருவர் போராட்டக்காரர்கள் மீது நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 16 பேர் கொல்லப்பட்டனர். 47 பேர் காயமடைந்தனர்.

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள கலானி சதுக்கத்தில் போராட்டக்காரர்கள் மீது அடையாளம் தெரியாத ஒருவர் நடத்திய தாக்குதலில் 16 பேர் பலியாகினர். 47 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் பற்றிய முழுமையான தகவல் இதுவரை வெளியாகவில்லை.

ஈராக்கில் ஊழல், வேலையின்மை அதிகரித்து வருவதைத் தொடர்ந்து அரசுக்கு எதிராக போராட்டம் தொடர்ந்து வருகிறது. அரசுக்கு எதிரான இப்போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களில் பெரும்பாலானவர்கள் இளைஞர்கள்.

ஒக்டோபர் மாதம் முதல் ஈராக்கில் நடக்கும் போராட்டத்தில் 400க்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர். இதன் காரணமாக ஈராக்கின் ஷியா மதகுருமார்கள், ஈராக் பிரதமர் மஹ்தி இராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இதனைத் தொடர்ந்து தனது பதவியை இராஜினாமா செய்வதாக ஈராக் பிரதமர் அதில் அப்துல் மஹ்தி அறிவித்தார். இந்நிலையில் அப்துல் மஹ்தியின் இராஜினாமாவை ஈராக் நாடாளுமன்றம் ஏற்றுக்கொண்டது. எனினும் அப்துல் மஹ்தியின் இராஜினாமாவுக்குப் பிறகும் ஆங்காங்கே வன்முறை நீடித்து வருகிறது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here