4 வயது சிறுவன் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு

திருகோணமலை- துறைமுக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மணவெளி பகுதியில் 4 வயது சிறுவன் ஒருவன் கிணற்றில் விழுந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு மீட்கப்பட்ட சிறுவன் செல்வராஜா சிமனியோன் எனவும் தெரியவருகின்றது.

தற்பொழுது அவரது சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

விசாரணைகளை துறைமுக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here