அடைக்கப்பட்ட தோனா தோண்டப்படுகிறது

ஐயங்கேணி கிராமத்தில் தேங்கியுள்ள வெள்ளத்தை வெளியேற்ற ஏறாவூர் பற்று பிரதேச சபைகள் களத்தில் இறங்கியுள்ளது. பிரதேச சபையின் உறுப்பினர் வனேந்திரன் சுரேந்திரனினால் முன்மொழியப்பட்ட பிரேரணை நிறைவேற்றப்பட்டு அடைக்கப்பட்டிருந்த தோனா இன்று தோண்டப்பட்டது.

இதனால் ஐயங்கேணி கிராமத்தில் தங்கி இருக்கும் வெள்ள நீர் வழிந்து ஓடுவதற்கு வழிவகுக்கும்.

ஏறாவூர் பற்று பிரதேச சபை உட்பட ஏறாவூர் பற்று, செங்கலடி பிரதேச செயலகம் இணைந்து வெள்ள நீர் வடிந்தோடக்கூடிய வகையில் வாடிகான் துப்பரவு மேற்கொண்டு இருந்தனர்.

மிச்நகர், மீராகேணி பகுதியில் ஒரு சிலரால் தோணாக்கள் அத்துமீறி அடைத்து வைத்துள்ளனர் .இதன்போது உரிய நடவடிக்கை எடுத்து வெளிகள், அகற்றப்பட்டது நீர் வடிந்தோடக்கூடிய வகையில் திருத்தம் செய்யப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here