மரக்கிளை முறிந்து விழுந்ததில் வீட்டின் கூரை சேதம்

மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குற்பட்ட டீசைட் தோட்டத்தில் நேற்று முன்தினம் (6) மாலை வீசிய காற்றுடன் கூடிய பலத்த மழையால் அப்பகுதியில் உள்ள பெரிய ஆலமரத்தின் கிளை ஒன்று வீட்டின் கூரையின் மீது விழுந்து சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மரத்தினால் அப்பகுதி மக்கள் தினமும் அச்சத்தில் வாழ்ந்து வருகின்றதாகவும், அந்தப் பகுதியில் பதினான்கு வீடுகள் அமைந்துள்ளதாகவும், மரத்தின் கிளைகள் எந்தநேரத்திலும். முறிந்து வீடுகளுக்கு சேதம் விளைவிக்கும் என்றும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

மரத்தின் கீழ் மின் இணைப்புகள் காணப்படுவதாகவும் மரத்தை வெட்டுவதற்கு தோட்ட நிர்வாகத்திடம் பலமுறை முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் மக்கள் குறிப்பிடுகின்றனர்.

-சாமிமலை நிருபர் ஞானராஜ்-

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here