வடக்கு வானில் தோன்றவுள்ள அரிய காட்சி: யாழில் உள்ளவர்கள் மட்டும் முழுமையாக பார்க்கலாம்!


நெருப்பு வளைய சூரிய கிரகணத்தை இலங்கையில் யாழ்ப்பாணத்தில் உள்ளவர்கள் முழுமையாக பார்வையிடலாம் என வானியலாளர்கள் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சிக்கு தெற்குப் பக்கமாக வாழ்பவர்கள் அன் ஒரு பகுதியை பார்வையிடலாம்.

டிசம்பர் 26ம் திகதி கிரகணத்தை பார்வையிடலாம் என வானியலாளர் அனுர சி. பெரேரா தெரிவித்துள்ளார்.

இந்த கிரகணம் டிசம்பர் 26ம் திகதி சவூதி அரேபியாவின் தம்மத்தில் முதலில் தென்படும். காலை 8 மணியளவில் தோன்றி, இந்தியப் பெருங்கடல் மற்றும் தென்னிந்தியா முழுவதும் பயணித்து வடக்கு இலங்கை வழியாக கடந்து செல்கிறது. இந்த கிரகணம் நிகழும்போது, ​​சந்திரன் பூமியிலிருந்து சுமார் 400,000 கி.மீ தூரத்தில் இருக்கும். மணிக்கு 3,600 கி.மீ வேகத்தில் நகரும்.

இந்த கிரகணத்தின் மையக் கோடு மன்னார் முதல் வக்கரை வரை இயங்குகிறது. இலங்கைக்குய் மன்னார் பகுதிக்குள்ளால் நுழையும் கிரகணம் யாழ்ப்பாணத்தில் காலை 9.34 மணிக்கு தெரியும். இது நான்கு நிமிடங்கள் மட்டுமே நீடிக்கும். 9.38 மணிக்கு முடிவடைந்து விடும்.

2010 ஜனவரி 15இல் கடந்த சூரிய கிரகணம் யாழ்ப்பாணத்தில் சுமார் 10 நிமிடங்கள் காணப்பட்டது. ஆனால் இந்த முறை இது 4 நிமிடங்களுக்கும் குறைவாகவே இருக்கும்.

சவூதி அரேபியாவில் தொடங்கும் இந்த வருடாந்திர கிரகணம் வடக்கு இலங்கை மீதும், மீண்டும் இந்தியப் பெருங்கடல் வழியாக இந்தோனேசியாவுக்கும் சென்று மதியம் 12.20 மணிக்கு முடிவடைகிறது.

இந்தோனேசியாவில் கிரகணத்தின் பாதை சுமத்ரா தீவின் மேலான பரப்பில் அமையும். மிகப் பெரிய கிரகணம் காலை 10.47 மணிக்கு பாடன் என்ற இடத்தில் தெரியும். இந்த கிரகணம் ஐந்து மணி நேரம் நீடிக்கும்.

கிளிநொச்சியில் இருப்பவர்களிற்கு கிரகணத்தின் ஒரு பகுதியையே பார்க்க முடியும். அனுராதபுரத்தில் வசிப்பவர்கள் சூரியனின் 87% சந்திரனால் மூடப்பட்டிருப்பதைக் காண்பார்கள். கொழும்பில் உள்ளவர்கள் சூரியனின் 84% மூடியிருப்பதைக் காண்பார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here