கிடைத்தது பிணை; வெளியில் வந்தார் ஞானசாரர்!

சாட்சியை மிரட்டிய குற்றத்துக்கு 6 மாத சிறைத் தண்டனை அனுபவித்து வரும் பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் நீதிமன்றால் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

ஞானசார தேரர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டின் போதான பிணை விண்ணப்பம் ஹோமகம நீதிவான் நீதிமன்றில் இன்று பிற்பகல் விசாரணைக்கு வந்தது. இதன்போதே பிணை வழங்கப்பட்டது.

கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளரும், கேலிச் சித்திரக் கலைஞருமான பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொடவுக்கு ஹோமாகம நீதிமன்ற வளாகத்தில் வைத்து பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், அச்சுறுத்தல் விடுத்தார் என்று குற்றஞ்சாட்டப்பட்டது.

வழக்கில் குற்றவாளியாக கண்டறியப்பட்ட கலகொட அத்தே ஞானசார தேரருக்கு இரண்டு குற்றங்களுக்கும் தலா 6 மாதங்கள் சிறைத் தண்டனை வழங்கி நீதிவான் தண்டைத் தீர்ப்பளித்தார். இரண்டு தண்டனைகளையும் ஏக காலத்தில் அனுபவிக்க முடியும் எனவும் தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்டது.

இந்த தண்டனைத் தீர்ப்புக்கு ஆட்சேபணை தெரிவித்து ஞானசாரர் சார்பில் அவரது சட்டத்தரணி மேல் நீதிமன்றில் மேன்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here