இலண்டன் தூதரகத்திற்கு வெளியில் தமிழர்களை எச்சரித்த பிரியங்க குற்றவாளி: பிரித்தானிய நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

பிரித்தானியாவில் போராட்டத்தில் ஈடுபட்ட இலங்கை தமிழர்களிற்கு அச்சுறுத்தல் விடுத்ததாக குற்றம்சாட்டப்பட்டிருந்த பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ குற்றவாளியென பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பொது ஒழுங்கு சட்டத்தை மீறியதாக குறிப்பிட்டு, அவரை குற்றவாளியென வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

2018ம் ஆண்டு இலங்கை சுதந்திர தினத்தின்போது, பிரித்தானிய தூதரகத்தின் எதிரில் ஆர்ப்பாட்டம் செய்த தமிழ் மக்களிற்கு அச்சுறுத்தல் விடுத்ததாக, அப்பொது தூதரக பாதுகாப்பு பிரிவில் பணியாற்றிய பிரிகேடியர் பிரியங்க மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

அது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டபோது, நீண்ட சட்டப் போராட்டத்தை இலங்கை நடத்தியது. முன்னர் அவர் இராஜதந்திர விலக்கை பெற்றிருந்தபோதும், இந்த வழக்கை மீள விசாரித்த நீதிமன்றம் இன்று அவர் குற்றவாளியென தீர்ப்பளித்துள்ளது.

“பெப்ரவரி 4, 2018 அன்று தொண்டையை வெட்டும் சைகைகள் செய்யப்பட்டன என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை” என்று தலைமை நீதவான் எம்மா அர்பூட்நாட் இன்று தனது தீர்ப்பில் தெரிவித்தார்.

போராட்டக்காரர்களிற்கு எதிராக அவரது உடல்மொழி திமிர் பிடித்ததாக இருந்ததாகவும் நீதிபதி தெரிவித்திருந்தார்.

அவருக்கு 2,400 ஸ்ரேர்லிங் பவுண் அபராதம் விதிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here