கிளிநொச்சியில் பரீட்சை மண்டபத்திற்கு மாணவர்களை படகில் அழைத்து சென்ற இராணுவம் (PHOTOS)


அடை மழை காரணமாக கிளிநொச்சியின் தாழ்வான பகுதிகள் பல நீரில் மூழ்கியுள்ளன. கண்டாவளை, உருத்திரபுரத்தின் சில பகுதிகள், தர்மபுரம், ஆனந்தபுரம், சிவபுரம், பன்னங்கண்டி, கிளிநகர் உள்ளிட்ட பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.

வெள்ளத்தால் பாடசாலைகளும் நீரில் மூழ்கியுள்ளன. தர்மபுரம் மகாவித்தியாலயம், கிளிநொச்சி இந்துக்கல்லூரி என்பனவற்றிற்குள்ளும் நீர் புகுந்தது.

கல்வி பொதுதராதர சாதாரண தர பரீட்சை நடந்து கொண்டிருக்கும் நிலையில், வெள்ளம் சூழ்ந்த பாடசாலைக்கு செல்வதில் மாணவர்கள் சிரமங்களை சந்தித்தனர். இதையடுத்து, அந்த பகுதிகளில் நிலை கொண்டிருந்த இராணுவத்தினர் மாணவர்களிற்கு உதவினர்.

படகு, இராணுவ ட்ரக்டர்களில் மாணவர்களை ஏற்றியு பரீட்சை மண்டபங்களிற்கு அழைத்துச் சென்றனர்.

அத்துடன், நீரில் மூழ்கிய பரீட்சை மண்டபங்களை மாடி வகுப்பறைகளிற்கு மாற்றும் பணியிலும் இராணுவத்தினர் ஈடுபட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here