மணியம்குளத்தை பாதுகாக்கும் முயற்சியில் பொது மக்கள்


கிளிநொச்சி ஸ்கந்தபுரம் மணியகுளத்தை பாதுகாக்கும் முயற்சியில் பொது மக்கள் ஈடுப்பட்டுள்ளனர்.

மாவட்டத்தில் பெய்து கனமழை காரணமாக சிறிய குளமான மணியம்குளத்திற்கு அதிகளவு நீர் வருகை ஏற்பட்டு அணைக்கட்டுக்கு மேலாக நீர் வழிந்தோட ஆரம்பித்துள்ளது.

இந் நிலைமையானது மிகவும் ஆபத்தானது அணைக்கட்டுக்கு மேலாக நீர் பாய்ந்தோடினால் அணைக்கட்டை உடைத்துவிடும் என்ற நிலையில் கிராம பொது மக்கள் ஒன்றிணைந்து மண் மூடைகளை அடுக்கி நீர் வழிந்தோடு் பகுதிகளை தற்காலிகமாக தடுத்துள்ளனர்.

மணியம்குளத்திற்கு கீழ் பகுதியில் மணியம்குளத்தைச் சேர்ந்த 140 குடும்பங்களும், விநாயகபுரத்தைச் சேர்ந்த 130 குடும்பங்களும் வாழ்கின்றனர். இதில் தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக விநாயகபுரத்தைச் சேர்ந்த பெரும்பாலான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனனர்.

எனவே மணியம்குளத்தின் நிலைமைகளை கருதி அதன் கீழ் வாழ்கின்ற பொது மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு கோரப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here