இரணைமடு வான் கதவுகள் 2 திறக்கப்பட்டன: பொதுமக்கள் அவதானம்! (PHOTOS)

இரணைமடு குளத்தின் இரு வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
கிளிநொச்சி இரணைமடு குளத்தின் இரண்டு வான்கதவுகள் ஆறு இஞ்சி அளவில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை எட்டு மணியளவில் திறக்கப்பட்டுள்ளன.
இரணைமடு குளத்தின் நீரேந்து பகுதிகளில் தொடர்ச்சியாக பெய்து வரும் கன மழை காரணமாக குளத்திற்கு நீர் அதிகளவு வருவதனால் நீர் மட்டம் 31 அடியாக உள்ள நிலையில் இரண்டு வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
இரணைமடு குளம் 36 அடி வரை நீரை சேமிக்க கூடியதாக இருப்பினும் அதிகளவு நீர் வந்து கொண்டிருப்பதனால் 31 அடி நீர் மட்டத்தில் இரண்டு வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.
எனவே இரணைமடு குளத்தின் வான் நீர் வெளியேறும் பகுதிகளில் வாழ்கின்ற பொது மக்கள்  முன்னெச்சரிக்கையாக இருக்குமாறும் கோரப்பட்டுள்ளனர்.
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here