யாழ் இந்து மகளிர் கல்லூரி அதிபர் மீதான குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை!


யாழ்.இந்து மகளிர் ஆரம்ப பாடசாலை அதிபர் மீது இலங்கை ஆசிரியர் சங்கத்தினால் முன்வைக்கப்பட்ட 8 குற்றச்சாட்டுக்களையும் நிரூபிக்க முடியவில்லை என மேற்படி குற்றச்சாட்டுக்களை விசாரணை நடாத்திய சுயாதீன விசாரணைக்குழுவின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது.

பாடசாலை அதிபர் செல்வி சாந்தினி மாணிக்கம் மீது இலங்கை ஆசிரியர் சங்கம் 2019ம் ஆண்டு மார்ச் மாதம் நிதி மோசடி மற்றும் முறைகேடுகள் குறித்து விசாரணை நடாத்துமாறு ஆளுநரிடம் முறையிட்டிருந்தது. இதனடிப்படையில் ஆளுநரினால் விசாரணை குழு ஒன்று உருவாக்கப்பட்டது.

மேற்படி விசாரணை குழுவில் சுகாதார அமைச்சின் சிரேஷ்ட உதவி செயலாளர் செ.பிரணவநாதன், வடமாகாண விவசாய அமைச்சின் நிர்வாக உத்தியோகஸ்த்தர் மே.சாந்தசீலன் ஆகியோர் தலைமையில் 8 முக்கிய குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை நடாத்தப்பட்டது.

குறிப்பாக தரம் 1ல் மாணவர்களை உள்ளீர்ப்பு செய்தபோது 15 ஆயிரம் ரூபாய் பணம் வாங்கியபோதும் அதற்கான பற்றுச்சீட்டு வழங்காமை மற்றும் நிதி வைப்பிலிடப்படாமை தொடர்பாக ஆராய்ந்த விசாரணை குழு பற்றுச்சீட்டுடன் பெறப்பட்ட பணம் வைப்பிலிடப்பட்டுள்ளதுடன் பற்றுச்சீட்டு வழங்கத மாணவர்களிடம் பொருள்களாக வழங்கப்பட்டுள்ளமை அறியப்பட்டு ஆவணங்கள் ஊடாக சரிபார்க்கப்பட்டுள்ளது.

2017ம் ஆண்டு தரம் 5 புலமைபரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களின் கௌரவிப்பின்போது 1 லட்சம் ரூபாய் சேர்க்கப்பட்டு அந்த பணம் அதிபரிடம் கொடுக்கப்பட்டதாகவும் அந்த பணம் வைப்பிலிடப்படவில்லை என்பது அந்த குற்றச்சாட்டு தொடர்பாக ஆராய்ந்த விசாரணை குழு அந்த பணத்தில் பொருட்கள் கொள்வனவு செய்யப்பட்டு இருப்பு பதிவேட்டிலும் அது பதிவு செய்யப்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.

மேலும் திருநெல்வேலியை சேர்ந்த பெற்றோர் ஒருவர் தொலைக்காட்சி பெட்டி மடிகணனி மற்றும் பல்லூடக ஒளிப்படக்கருவி ஆகியவற்றை பாடசாலைக்கு வழங்கியபோ தும் அவை பொருட்பதிவு ஏட்டில் பதியப்படவில்லை. என்பதுடன் பற்றுச்சீட்டும் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்பில் ஆராய்ந்த விசாரணை குழு குறித்த பொருட்கள் தற்காலிக பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டிருப்பதை உறுதிப்படுத்திய விசாரணை குழு பொருட்களை வழங்கியவர் தாம் பொருட்களை வழங்கியதற்கான கடிதத்தை கொடுக்காமையால் நிரந்தர பதிவேட்டில் பதியப்படவில்லை. என்பதை உறுதி செய்துள்ளது.

4வது முறைப்பாடாக 2018ம் ஆண்டு நடனவிழா ஒன்றில் பங்குபற்றிய மாணவர்களுக்கு வழங்கப்பட்ட 25 ஆயிரம் ரூபாய் காசோலை வங்கியில் வைப்பிலிடப்படவில்லை என்ற குற்றச்சாட்டு பொய்யானது எனவும் அது 20 ஆயிரம் பெறுமதியான காசோலை எனவும் அந்த காசோலை இலங்கை வங்கியில் 14.06.2018ம் திகதி வைப்பிலிடப்பட்டமை உறுதி செய்யப்பட்டது.

மேலும் புத்தக அச்சிடலில் ஏற்பட்டதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு மற்றும் பாடசாலை சுற்றாட லை தூய்மையாக்க இரு தொழிலாளர்களுக்கு பணம் வழங்கயமை போன்ற குற்ற்சசாட்டுக்கள் ஆதாரமற்றவை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அதிபர் மீது முன்வைக்கப்பட்ட நிதி மோசடி மற்றும் முறைகேடு போன்ற குற்றச்சாட்டுக்கள் எவையும் நிரூபிக்கப்பட முடியாமல்போயுள்ளதுடன்இ விசாரணை குழு சில நிர்வாக குறைபாடுகளை மட்டுமே கண்டுபிடித்துள்ளது.

மேலும் அதிபர் மீதான குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவை என கூறிய பாடசாலை அபிவிருத்தி சங்கம் மற்றும் பெற்றோர் குற்றச்சாட்டுக்கள் விசாரணை நடாத்தப்பட்டு உண்மை வெளிப்படுத்தப்படவேண்டும் என தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்து வந்தமையும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here