கிளிநொச்சியில் பெரு வெள்ளம்; பொது மக்கள் பாதிப்பு: மீட்பு பணியில் இராணுவம்! (PHOTOS)


கிளிநொச்சியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கன மழை காரணமாக மாவட்டத்தின் பல பகுதிகள் வெள்ளத்தினால் மூழ்கியுள்ளன.

கிளிநொச்சி இரத்தினபுரம், ஆனந்தபுரம், சிவபுரம், பன்னங்கண்டி,கிளிநகர் உள்ளிட்ட பல பகுதிகள் வெள்ளத்தினால் மூழ்கியுள்ளன. கனகாம்பிகை குளம் இரண்டு அடி வான்பாய்வதனால் மேற்படி வெள்ளப்பாதிப்புகள் அதிகரித்துள்ளன.

நேற்றிரவு (வியாழன்) வெள்ளம் மக்கள் குடியிருப்புக்குள் சென்றதன் காரணமாக மக்கள் கடும் நெருக்கடிகளை சந்தித்துள்ளனர். இதனையடுத்து உடனடியாக இராணுவத்தினர் சம்பவ இடங்களுக்குச் சென்று பாதிக்கப்பட்டுள்ள பொது மக்களை பாதுகாப்பாக மீட்கும் பணியில் ஈடுப்பட்டிருந்தனர்.

வெள்ளப் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ள இடங்களில் படையினர் தொடர்ந்தும மீட்பு பணிகளில் ஈடுப்பட்டு வருகின்றனர். தொடர்ச்சியாக மழை பெய்து கொண்டிருப்பதனாலும், குளங்களுக்கு நீர் வரவு அதிகரித்து காணப்படுவதனாலும் வெள்ளப் பாதிப்புகள் மேலும் அதிகரிக்க கூடும் என நீர்ப்பாசனத் திணைக்களம் மற்றும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் என்பன அறிவித்துள்ளன. அத்தோடு குளங்களின் வான் பாயும் பகுதிகளில் குடியிருக்கும் பொது மக்கள் பாதுகாப்பாக முன்னெச்சரிகையாகவும் இருக்குமாறும் கோரப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here