கோட்டாவை கொன்றால் வெளிநாட்டில் ‘செற்றில்’: கைதானவர் வெளியிடும் ‘பகீர்’ தகவல்!


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அல்லது அவரது குடும்ப உறுப்பினர்களை படுகொலை செய்ய சதி செய்ததாக கைது செய்யப்பட்ட சந்தேக நபரை எதிர்வரும் 16ம் திகதி வரை தடுத்து வைத்து விசாரணை செய்ய பொலிசாருக்கு நீதிமன்றம் அனுமதியளித்தது.

வாழைச்சேனை, ஓட்டமாவடி பகுதியை சேர்ந்த  ஹக்கீம் முகமது ரிஃப்கான் என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அல்லது அவரது நெருங்கிய குடும்ப உறுப்பினர்களில் யாரையாவது படுகொலை செய்தால், வெளிநாட்டில் ஆடம்பர வாழ்க்கை வாழ முடியும் என்று சந்தேக நபர் மற்ற மூன்று தமிழர்களிடம் கூறியதாக வாக்குமூலமளித்துள்ளதாக சிங்கள ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

சீதுவை பகுதியில் ஜெயவர்தனபுர பிரதேசத்தில் சந்தேகநபரும், வேறு மூன்று தமிழர்களும் வாடகை வீடொன்றில் தங்கியிருந்தனர். சந்தேகநபரின் வங்கிக் கணக்கிற்கு வெளிநாட்டில் இருந்து அனுப்பப்படும் பணத்தின் மூலமே வாடகைப்பணம் செலுத்தியுள்ளார்.

அநுராதபுரத்தை சேர்ந்த ஐ.தே.க எம்.பியொருவருக்கு தான் நெருக்கமானவர் என்றும், அவருக்கு அழைப்பேற்படுத்துமாறும் சந்தேகநபர் பொலிசாரிடம் தெரிவித்ததாக சிங்கள ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

சந்தேகநபரிடமிருந்து 11 சிம் அட்டைகளை பொலிசார் மீட்டனர்.

அவர் இரண்டு வருடங்கள் சவுதி அரேபியாவில் பணியாற்றியுள்ளார். அந்த காலப்பகுதியில் ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பை பேணினாரா என்ற கோணத்திலும் பொலிசார் விசாரணைகளை முடுக்கி விட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here