இனி மண்சரிவை முன்கூட்டியே கணிக்க வாய்ப்பு: அமெரிக்கா வழங்கிய 3 கண்காணிப்பு அலகுகள்!


இலங்கையில் மண்சரிவு குறித்த ஆராய்ச்சிகளிற்காக தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு, அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

இதன்படி, இலங்கைக்கு மண்சரிவு கண்காணிப்பு அலகுகள் மூன்றை அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் நன்கொடையாக வழங்கியுள்ளது. இதன்மூலம் மண்சரிவு அபாயமுள்ள பகுதிகளை இலகுவாக அடையாளம் காண முடியுமென மண்சரிவு ஆராய்ச்சி மற்றும் அனர்த்த மேலாண்மை பிரிவு  இயக்குனர் காமினி ஜெயதிஸ்ஸா தெரிவித்துள்ளார்.

மண்சரிவை தடுப்பதற்கான வழிமுறைகளை நடைமுறைப்படுத்துவதுடன், எச்சரிக்கை முறைகளை அமுல்படுத்துவது குறித்தும் தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு நடவடிக்கை மேற்கொள்ளும்.

நன்கொடையாக வழங்கப்பட்ட கண்காணிப்பு சாதனங்களில் ஒன்று களுத்துறையில் நிறுவப்படும். மற்றையது, பதுளையில் நிறுவப்படும். மூன்றாவது சாதனத்தை நிறுவும் இடம் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை.

இந்த சாதனங்களை கையாள்வது குறித்து இலங்கை அதிகாரிகளிற்கு, அமெரிக்க அதிகாரிகள் பயிற்சியளித்து வருகிறார்கள்.

கடந்த வாரம் வலப்பனை பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் நால்வர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here