இலங்கைக்கு இன்று மேலும் சில தங்கப் பதக்கங்கள்!

லக்சிகா சுகந்தி

நேபாளத்தில் நடைபெறும் 13வது தெற்காசிய விளையாட்டு நிகழ்வில் இலங்கை இன்று மேலும் சில தங்கப்பதக்கங்களை வென்றது.

100 மீற்றர் தடை தாண்டலில் இலங்கை வீராங்கணை லக்சிகா சுகந்தி தங்கம் வென்றார். அவர் 13.6 வினாடிகளில் இலக்கை அடைந்தார். இந்த போட்டியில் இலங்கையின் இரேஷானி ரணசிங்க வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

தெற்காசிய போட்டியில் மகளிர் 100 மீற்றர் தடைதாண்டல் போட்டிச் சாதனை இலங்கை வசமே உள்ளமை குறிப்பிடத்தக்கது. 1999இல் ஸ்ரீயானி குலவன்ஷ 13.1 வினாடிகளில் இலக்கை அடைந்ததே சாதனையாக உள்ளது.

இதற்கிடையில் ஆண்கள் 100 மீற்றரை் தடை தாண்டலில் ரோஷன் தம்மிக வெண்கலப் பதக்கம் வென்றார்.

ஆண்கள் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை இலங்கை வென்றுள்ளது. அருண தர்ஷனாதங்கப்பதக்கம் வென்றார். பிரியந்த லக்மல் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

மகளிர் 400 மீற்றர் ஓட்டப்பந்தயத்தில் டில்ஷி குமாரசிங்க தங்கம் வென்றார். மகளிருக்கான வூசோ போட்டியில் எம்.ஐ.டி.எஸ்.குணசேகர தங்கம் வென்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here