அதிகார துஷ்பிரயோகம் செய்யும் ஜனாதிபதி தவறான முன்னுதாரணமாகி விடுவார்


அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தன்னுடைய அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளார், இது தவறான முன்னுதாரணம் என்பதோடு நாட்டின் எதிர்காலத்துக்கு நல்லதல்ல என்று இந்திய-அமெரிக்க காங்கிரஸ் பெண் உறுப்பினர் பிரமீளா ஜெயபால் ட்ரம்ப் மீது விமர்சனம் வைத்துள்ளார்.

“தன் சொந்த அரசியல் நலன்களுக்காக நாட்டின் நலன்களை அடகுவைக்கும் அதிகரா துஷ்பிரயோகம் செய்யும் ட்ரம்ப் போன்றோரை நாம் கண்டிக்காவிட்டால், அமெரிக்க மக்களின் பாதுகாப்பு, தேசியப் பாதுகாப்பு ஆகியற்ற சுய அரசியல் லாபத்துக்காக பின்னுக்குத் தள்ளுவதை நாம் அனுமதித்தால் அது நம் ஜனநாயகத்துக்கு ஒரு பேரச்சுறுத்தல்” என்று பிரமீளா ஜெயபால் கடுமையாக சாடினார்.

ஜனாதிபதி ட்ரம்பின் மீதான உரிமை மீறல் பிரச்சினையில் முதல் நாளன்றே உரிமை மீறல் தீர்மானத்தை பலமாக வரவேற்று பேசினார் பிரமீளா ஜெயபால். சக்திவாய்ந்த அமெரிக்க பாராளுமன்ற நீதிக்கமிட்டியின் இவர் ஒரே ஒரு இந்திய-அமெரிக்கர் ஆவார்.

“நாம் மிகவும் நெருக்கடியான காலக்கட்டத்துக்குள் நம்மை செலுத்திக் கொண்டிருக்கிறோம். ஒரு ஜனாதிபதி தன் அலுவலகத்தை தன் சுய அரசியல் லாபங்களுக்காகப் பயன்படுத்துவது உரிமை மீறல் பிரச்சினையாக நாம் பார்க்காவிட்டால், நாம் ஜனநாயக நாட்டில் வாழ்வதாக அர்த்தமில்லை, எதேச்சதிகாரத்தின் கீழ் வாழ்வதாகி விடும். ஊழல் ஊழல் என்று கதறும் ஜனாதிபதியை நாம் எந்த விதத்தில் ஊழலுக்கு எதிரானவர் என்று நம்புவது? என்றார் பிரமீளா ஜெயபால்.

ஜனாதிபதி தேர்தலின் போது ஹிலாரி கிளிண்டனின் பெயரைக் கெடுக்க ரஷ்ய உதவியை நாடியதாக எழுந்த குற்றச்சாட்டு உயிருடன் இருக்கும்போதே தற்போது உக்ரைனில் ஜனாதிபதி வாலோதிமிர் ஸெலன்ஸ்கியிடம் ஜனநாயகக் கட்டியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பைடன் மற்றும் இவரது மகன் ஹண்ட்டர் பற்றிய ஒரு சேதமேற்படுத்தக் கூடிய தகவலை விசாரிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

அமெரிக்க துணை ஜனாதிபதியாக ஜோ பைடன் இருந்த போது ஹண்டர் ஒரு நிறுவனத்தில் அங்கு பணியாற்றி வந்தார். இது குறித்த தகவலை உக்ரைன் அளிப்பதற்காகவும் ஜோ பைடன் மற்றும் ஹண்டர் மீது விசாரணை மேற்கொள்ளவும் வலியுறுத்தியதோடு இது முடியும் வரை உக்ரைனுக்கு வழங்க வேண்டிய இராணுவ உதவித்தொகையையும் நிறுத்தி வைத்து இன்னொரு பெரும் தவறையும் செய்தார். பைடன், ஹண்டரை விசாரி இல்லையேல் இராணுவ உதவி கிடைக்காது என்பதே ட்ரம்பின் செய்தி.

இதுதான் தற்போது ட்ரம்பின் பதவியையே குறிவைக்கும் உரிமை மீறல் பிரச்சினையாக பூதாகாரமாகியுள்ளது. இந்நிலையில்தான் அமெரிக்க இந்திய காங்கிரஸ் பெண் உறுப்பினர் பிரமீளா ஜெயபால் ட்ரம்ப் மீது தாக்குதல் விமர்சனம் முன் வைத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here