தெற்காசிய மரதனில் வெள்ளி வென்றார் தமிழ் வீரன் சண்முகேஸ்வரன்!


நேபாள தலைநகர் காட்மண்டுவில் நடைபெறும் தெற்காசிய விளையாட்டு விழாவில் கமார் சண்முகேஸ்வரன், மரதன் ஓட்டத்தில் வெள்ளிப்பதக்கம் வென்றார்.

நேபாளத்தில் நடைப்பேற்று வரும் 13ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் நேற்று காலை நடைப்பெற்ற 10 ஆயிரம் மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கை வீரர் குமார் சண்முகேஸ்வரன் கலந்துகொண்டார். தான் பங்கேற்ற முதலாவது சர்வதேச போட்டியிலேயே பதக்கம் வென்று சாதித்துள்ளார்.

பந்தயத் தூரத்தை 30 நிமிடம் 49.20 செக்கன்களில் ஓடி முடித்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.

இதில் தங்கத்தை இந்தியாவும் (30,49,20), வெண்கலத்தை நேபாளமும் (30,50,06) வென்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here