நந்திக்கடல் முழுமையாக வனஜீவராசிகள் திணைக்களத்திடம்: 5000 குடும்பங்கள் நடுத்தெருவிற்கு வரும் அபாயம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் நந்திக்கடல் நீரேரியை முழுமையான வனஜீவராசிகள் திணைக்களத்தின் கீழ் கொண்டு வரும் வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியாகவுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியானால், நந்திக்கடலில் வீச்சு தொழிலை நம்பி வாழ்க்கை நடத்தும் சுமார் 5,000 குடும்பங்கள் நடுத்தெருவிற்கு வரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் நன்னீர் மீன்பிடியில் பிரதான இடம்வகிப்பது நந்திக்கடல் நீரேரியாகும். இந்த நீரேரியில் சுமார் 5,000 குடும்பங்கள் வீச்சு தொழில் செய்து வாழ்க்கை நடத்துகின்றனர். அத்துடன், இறால் பிடிப்பதும் அங்கு பருவத்திற்கு பருவம் இடம்பெறும்.

முல்லைத்தீவு மாவட்ட பொருளாதாரத்தில் முக்கிய அங்கமாக நந்திக்கடல் நீரேரி மீன்பிடியே விளங்குகிறது. இந்தநிலையில் நந்திக்கடல் நீரேரியை வனஜீவராசிகள் திணைக்களத்தின் கீழ் கொண்டு வரும் வர்த்தமானி தயாராகி வருகிறது. இரண்மொரு தினத்தில் அது வெளியாகுமென தெரிகிறது.

வடக்கு, கிழக்கில் மக்களின் வாழிடங்களையும், பொருளாதார மையங்களையும் குறிவைத்து வனஜீவராசிகள் திணைக்களம் செயற்படுகிறதோ என்ற ஐயம் மக்களிடம் ஏற்பட்டுள்ளது. அதேசமயம், வனஜீவராசிகள் திணைக்களத்தின் முக்கிய கடமைகளில் ஒன்றாக- வன உயிரினங்களை காப்பதில் திணைக்களம் போதிய கவனம் செலுத்துவதில்லையென்ற விமர்சனம், நேற்று கிளிநொச்சியில் சிறுத்தைப் புலியொன்று அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் அதிகரித்துள்ளது.

இதேவேளை, கடந்த வாரம் முல்லைத்தீவு கேப்பாபுலவு இராணுவத்தினர் பெரிய சிறுத்தைப்புலியொன்றை சுட்டுக்கொன்றுள்ளனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here