பேஸ்புக் லைவ் வீடியோவால் சிக்கல்: செங்கலடி பிரதேசசபையிலிருந்து வெளிநடப்பு!:

மட்டக்களப்பு – ஏறாவூர்ப்பற்று பிரதேச சபையில் நடைபெற்ற சிறப்பு அமர்வில் பார்வையார்கள் சபையிலிருந்து வெளியேற்றப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து 9 உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்தனர்.

மட்டக்களப்பு ஏறாவூர்ப்பற்று (செங்கலடி) பிரதேச சபையின் சிறப்பு அமர்வு இன்று தவிசாளர் நாகமணி கதிரவேல் தலைமையில் நடைபெற்றது.

சபையின் அமர்வில் பார்வையாளர்கள் அலைபேசி மூலம் வீடியோ எடுத்து அதனை முகநூலில் பதிவிடுவதாகச் சுட்டிக்காட்டப்பட்ட போதிலும், மீண்டும் மீண்டும் பார்வையாளர்கள் சபை அமர்வு நடவடிக்கைகளை வீடியோ எடுப்பதாகக் குற்றஞ்சாட்டி பார்வையார்களை அங்கிருந்து வெளியேற்றுமாறு உறுப்பினர்கள் கோரிக்கை முன்வைத்தனர்.

இதனை ஏற்றுக்கொண்ட தவிசாளர் சபையின் அனுமதியின்றி நுழைந்த பார்வையாளர்களை வெளியேற்றுமாறு உத்தரவிட்டார். இனி வருங்காலங்களில் சபை அமர்வுகளுக்கு பார்வையாளர்கள் வருகை தருவதாயின், 3 தினங்களுக்கு முன்பு அனுமதி பெற வேண்டுமெனவும் உத்தரவிட்டார்.

பார்வையாளர்கள் வெளியேற்றப்பட்டதற்கு எதிர்ப்பு வெளியிட்ட சிறிலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர் வ.சுரேந்திரன் சபையிலிருந்து வெளிநடப்புச் செய்தார். அதனையடுத்து, தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியைச் சேர்ந்த 8 உறுப்பினர்களும் வெளிநடப்புச் செய்தனர்.

இதையடுத்து 10 நிமிடங்கள் சபை ஒத்தி வைக்கப்பட்டு மீதமுள்ள உறுப்பினர்களுடன் சபை அமர்வு மீண்டும் நடைபெற்றது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here