தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முன்னோடி தலைமுறையை சேர்ந்த ஈரோஸ் அருளர் காலமானார்!

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முன்னோடி தலைமுறையை சேர்ந்த அருளர் எனப்படும் இ.அருள்பிரகாசம் இன்று காலமானார். ஈரோஸ் அமைப்பை உருவாக்கியவர்களில் ஒருவர் அருளர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறிது காலம் நோய்வாய்ப்பட்டிருந்த அருள்பிரகாசம் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.

தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தின் மூத்த போராளியான அருளர், 77ம் ஆண்டு இனக்கலவரத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை கொழும்பில் தங்க வைத்து, லங்கா ராணி என்ற கப்பலில் வடக்கிற்கு தமிழ் இளைஞர்கள் குழுவினரால் அனுப்பி வைக்கப்பட்டார்கள். இந்த பின்னணியில் லங்கா ராணி என்ற நாவலை எழுதியிருந்தார்.

அருளரின் குடும்பத்திற்கு சொந்தமான கன்னாட்டி பண்ணையில் தமிழீழ போராட்டத்தின் ஆரம்பகர்த்தாக்கள் அனைவரும் தங்கியிருந்ததுடன், பயிற்சியும் பெற்றிருந்தனர். பிரபாகரனும் அந்த பண்ணையில் நீண்டகாலம் தங்கியிருந்தார்.

1980களில் புலம்பெயர்ந்து சென்ற அருளர், யுத்தத்தின் பின்னர் நாடு திரும்பி, யாழ்ப்பாணத்தில் வசித்து வந்தார்.

அருளரின் புதல்விகளில் ஒருவரான மியா உலகப்புகழ்பெற்ற பாடகியென்பது குறிப்பிடத்தக்கது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here