டிசம்பர் மாதப்படி 12 ராசிக்குமான பிளஸ் – மைனஸ்!


டிசம்பர் மாதம் எந்த ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும், பரிகாரம் என்ன செய்யலாம், அதிர்ஷ்ட கிழமைகள் என்ன? என்பதைப் பற்றி ஒருவரி பலன்களாகப் பார்ப்போம்.

மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)

பிளஸ்: அனைத்திலும் வெற்றி வாகை

மைனஸ் : நேரத்தில் கவனம்

பரிகாரம்: செவ்வாய்கிழமையில் நவகிரகத்தில் செவ்வாய அர்ச்சனை செய்து தீபம் ஏற்றி வணங்குவது வாழ்வில் முன்னேற்றத்தை தரும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு – செவ்வாய் – வெள்ளி

சந்திராஷ்டம தினங்கள்: 24, 25

அதிர்ஷ்ட தினங்கள்: 17, 18, 19

ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதம், ரோகிணி, மிருகசிரீஷம் 1, 2, பாதம்)

பிளஸ்: பொறுப்புகள் அதிகரிக்கலாம்

மைனஸ்: உடல்நலத்தில் அக்கறை அவசியம்

பரிகாரம்: தட்சிணாமூர்த்தியை வணங்குவதும் வயதானவர்களுக்கு உதவிகள் செய்வதும் எல்லா நன்மைகளையும் தரும். செல்வ சேர்க்கை உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன் – வெள்ளி

சந்திராஷ்டம தினங்கள்: 26, 27,

அதிர்ஷ்ட தினங்கள்: 20, 21

மிதுனம் (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதம்)

பிளஸ்: புதிய உத்வேகம் பிறக்கும்

மைனஸ்: அதிக அலைச்சல் – பிரயாணம்

பரிகாரம்: பெருமாளை புதன்கிழமைகளில் அர்ச்சனை செய்து வணங்க திருமண தடை நீங்கும். குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு – புதன் – வியாழன்

சந்திராஷ்டம தினங்கள்: 1, 2, 28, 29, 30

அதிர்ஷ்ட தினங்கள்: 22, 23

கடகம் (புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)

பிளஸ்: சுபநிகழ்ச்சிகளில் இருந்த சுணக்கம் அகலுதல்

மைனஸ்: உடல்நலத்தில் அதிக கவனம் தேவை

பரிகாரம்: அம்மனுக்கு அரளிப்பூ அர்ப்பணித்து அர்ச்சனை செய்து வணங்க எல்லா காரியங்களும் கைகூடும். எதிர்ப்புகள் நீங்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள் – புதன் – வெள்ளி

சந்திராஷ்டம தினங்கள்: 3, 4, 5, 31

அதிர்ஷ்ட தினங்கள்: 24, 25

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)

பிளஸ்: பணவரத்து சீராக இருக்கும்

மைனஸ்: தொழில் சார்ந்த விஷயங்களில் வாக்கு கொடுக்கும் போது கவனம் தேவை

பரிகாரம்: தினமும் சூரிய நமஸ்காரம் செய்து சிவனை வணங்க பிரச்சனைகள் குறையும். காரிய வெற்றி உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு – வியாழன்

சந்திராஷ்டம தினங்கள்: 6, 7

அதிர்ஷ்ட தினங்கள்: 26, 27

கன்னி (உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்)

பிளஸ்: வீடு மனை வாகன ப்ராப்தி அமைதல்

மைனஸ்: உறவினர் நண்பர்களிடம் கருத்து வேறுபாடு

பரிகாரம்: கிருஷ்ண பரமாத்மாவை வணங்க கஷ்டங்கள் தீரும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன் – வெள்ளி

சந்திராஷ்டம தினங்கள்: 8, 9, 10

அதிர்ஷ்ட தினங்கள்: 1, 2, 28, 29, 30

துலாம் (சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்)

பிளஸ்: தைரியம் தன்னம்பிக்கை அதிகரித்தல்

மைனஸ்: வாக்குவாதங்கள் ஏற்படுதல்

பரிகாரம்: மகாலட்சுமியை வணங்க கடன் பிரச்சனை தீரும். மன நிம்மதி கிடைக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய் – வெள்ளி

சந்திராஷ்டம தினங்கள்: 11, 12

அதிர்ஷ்ட தினங்கள்: 3, 4, 5, 31

விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை)

பிளஸ்: குடும்பத்தில் மகிழ்ச்சி

மைனஸ்: வாகனப் ப்ரயோகத்தில் கவனம்

பரிகாரம்: திருமுருகாற்றுபடையை பாராயணம் செய்து வர கந்தன் அருளால் கண்டபிணி நீங்கும். குடும்ப கஷ்டம் தீரும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய் – வெள்ளி

சந்திராஷ்டம தினங்கள்: 13, 14

அதிர்ஷ்ட தினங்கள்: 6, 7

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)

பிளஸ்: பொறுப்புகள் அதிகரித்தல்

மைனஸ்: எதிர்மறை எண்ணங்கள் தோன்றுதல்

பரிகாரம்: குருவிற்கு சாமந்தி மலரை சமர்பித்து வியாழக்கிழமையில் வணங்கி வர எல்லா நன்மைகளும் உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு – வியாழன் – வெள்ளி

சந்திராஷ்டம தினங்கள்: 15, 16

அதிர்ஷ்ட தினங்கள்: 8, 9, 10

மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதம், திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்)

பிளஸ்: சுபவிரையச் செலவுகள்

மைனஸ்: நேர நிர்வாகத்தில் குளறுபடி

பரிகாரம்: சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வணங்கி வர கஷ்டங்கள் நீங்கும். ஆரோக்கியம் உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு – செவ்வாய் – வெள்ளி

சந்திராஷ்டம தினங்கள்: 17, 18, 19

அதிர்ஷ்ட தினங்கள்: 11, 12

கும்பம் (அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதம்)

பிளஸ்: லாபம் அதிகரித்தல்

மைனஸ்: குழந்தைகளுடன் கருத்து வேறுபாடு

பரிகாரம்: விநாயக பெருமானை தேங்காய் தீபம் ஏற்றி வழிபடுவது காரிய தடைகளை போக்கும். நன்மை கிடைக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு – வியாழன்

சந்திராஷ்டம தினங்கள்: 20, 21

அதிர்ஷ்ட தினங்கள்: 13, 14

மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

பிளஸ்: தொழில் – வேலை முன்னேற்றம்

மைனஸ்: வீடு மனை வாங்குவதில் சுணக்க நிலை

பரிகாரம்: நவகிரகத்தில் குருவுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபட செல்வம் சேரும். கல்வியில் வெற்றி கிடைக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன் – வியாழன் – வெள்ளி

சந்திராஷ்டம தினங்கள்: 22, 23

அதிர்ஷ்ட தினங்கள்: 15, 16

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here