குழந்தையை மறைத்தமையால் அழகிப் பட்டத்தை பறித்ததற்கு எதிராக போராட்டத்தில் இறங்கிய அழகி!

உக்ரைன் அழகி பட்டத்தை பறித்ததுடன், உலக அழகி போட்டிகளில் தன்னை பங்கேற்க அனுமதிக்காதமைக்கு எதிராக முன்னாள் உக்ரேனிய அழகி 24 வயதான வெரோனிகா டிடுசென்கோ சட்ட நடவடிக்கையில் இறங்கியுள்ளார்.

அத்துடன், உலக அழகிப் போட்டி விதிமுறைகளை மாற்ற போராடுவோம் என குறிப்பிட்டு, #righttobeamother என்ற ஹாஷ்டேக்கை உருவாக்கி பிரச்சாரத்திலும் இறங்கியுள்ளார். அழகிப் போட்டிகள் பெண்களின் உரிமைகளை அங்கீகரிக்க மறுப்பதாக தெரிவித்து, இந்த ஹாஷ்டேக்கிற்கு ஆதரவு பெருகி வருகிறது.

2018ம் ஆண்டு உக்ரைனின் அழகியாக  வெரோனிகா டிடுசென்கோ தெரிவானார். அவர் பட்டம் வென்ற சிறுதுகாலத்திலேயே, அவருக்கு 5 வயதில் மகள் இருக்கிறார் என்றும், அதை மறைத்து போட்டியில் பங்கேற்றார் என்றும் தகவல் வெளியானது. இதை ஆராய்ந்த போட்டிக்குழு, அந்த தகவல் உண்மையென்பதை கண்டறிந்து, அவரிடமிருந்து உக்ரைன் அழகி பட்டத்தை பறித்தது.

இதையடுத்து, உலக அழகி போட்டியில் அவர் பங்கேற்க முனைந்தபோது, அதற்கு அனுமதிக்கப்படவில்லை. அவர் ஒரு குழந்தையின் தாய் என்பதாலேயே அனுமதிக்கப்படவில்லை.

உலக அழகிப்போட்டி விதிகள், தாய்மார்கள் மற்றும் திருமணமான பெண்கள் அழகுப் போட்டியில் பங்கேற்பதைத் தடைசெய்கிறது. அதனுடன் தொடர்புடைய ஒப்பந்தத்தில் கையெழுத்திட போட்டியாளர்களைக் கட்டாயப்படுத்துகின்றனர்.

இதை பாகுபாடு என குறிப்பிட்டுள்ள வெரோனிகா, உலகளாவிய அழகுப் போட்டிகள் “இருண்ட யுகங்களில் சிக்கியுள்ளதாகத் தெரிகிறது” என்று இன்ஸ்டகிராமில் குறிப்பிட்டுள்ளார்.

“நான் மீண்டும் அழகிப்பட்டத்தை பெற விரும்பவில்லை. ஆனால், பரந்த சமுதாயத்திற்கான விதிகளை மாற்ற விரும்புகிறேன்.” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

உலக அழகிப் போட்டி அமைப்பாளர்கள் திருமணம், மகப்பேறு மற்றும் பாலினம் உள்ளிட்ட சில குணாதிசயங்களின் அடிப்படையில் பாகுபாட்டிலிருந்து பாதுகாக்கும் 2010 சமத்துவ சட்டத்தின் விதிமுறைகளை மீறுவதாகக் கூறி லண்டனில் சட்ட நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளார் வெரோனிகா.

இந்த ஆண்டுக்கான உலக அழகிப் போட்டியில் இறுதிப் போட்டி இம்மாதம் 14ம் திகதி லண்டனில் நடைபெறுகிறது. உக்ரைன் சார்பில்  சட்ட மாணவி மார்கரிட்டா பாஷாவால் கலந்து கொள்கிறார்.

மிஸ் வேர்ல்ட் உலகின் பழமையான அழகுப் போட்டி ஆகும். இது முதன்முதலில் பிரிட்டனில் 1951 இல் நடைபெற்றது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here