பருத்தித்துறை நகரசபை வரவு செலவு திட்டம் தோல்வி!


தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆளுகையிலுள்ள பருத்தித்துறை நகரசபையின் வரவு செலவு திட்டம் இன்று (2) தோற்கடிக்கப்பட்டது.

இன்று காலை இடம்பெற்ற அமர்வில் அமர்வில் நகரசபை தலைவர் இருதயராஜாவினால் வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்பட்டது.

வரவு செலவு திட்டம் குறித்த விவாதம் நடத்தப்படவில்லை, உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்து தயாரிக்கப்படவில்லையென எதிர்க்கட்சிகள் குற்றம்சுமத்தின.

எனினும், அதை ஏற்றுக்கொள்ளாத தலைவர் வாக்கெடுப்பிற்கு கோரினார். வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக 7 வாக்குகள் அளிக்கப்பட்டன. தமிழ் தேசிய கூட்டமைப்பு 5, உதயசூரியன் 1, சுயேட்சை 1 ஆதரவாக வாக்களித்தனர்.

எதிராக 8 வாக்குகள் அளிக்கப்பட்டன. தமிழ் தேசிய மக்கள் முன்னணி 6, ஈ.பி.டி.பி 2 வாக்குகள் அளிக்கப்பட்டன.

இதன்படி மேலதிக 1 வாக்கினால் தோற்கடிக்கப்பட்டது. எனினும், மீண்டும் வரவு செலவு திட்டத்தை சமர்ப்பித்து, நிறைவேற்றிக்கொள்ள முடியுமென்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here