இழப்பீட்டு திட்டத்திற்காக ஆலோசனை அமர்வுகளை நடத்தவுள்ள இழப்பீட்டிற்கான அலுவலகம்!


நாடு முழுவதும் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள இழப்பீட்டிற்கான அலுவலகம் தீர்மானித்துள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஆயுத மோதல்களாலோ அல்லது நாடு முழுவதுமான அரசியல் நிலைமைகள் மற்றும் உள்நாட்டு அமைதியின்மையின் மூலமாகவோ பாதிக்கப்பட்டவர்களினதும் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் குடும்பங்களினதும் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கான ஒரு நிலையான இழப்பீட்டுத் திட்டம் வகுப்பதே இதன் நோக்கமாகும்.

இத் திட்டத்தின்ன மூலம் பாதிக்கபட்டவர்களை அடிப்படையாக கொண்ட தனிநபர் மற்றும் கூட்டு இழப்பீடுகளை வழங்குவதற்கும், இன்னலுக்குள்ளான நபர்களின் தேவைகளை புரிந்து அவற்றை அறிந்து கொள்வதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் எதிர்வரும் 9 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை நாட்டின் பல பாகங்களுக்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களின் ஆலோசனையை பெறவுள்ளது.

9 ஆம் திகதி முற்பகல் 9.00 மணிக்கு தெல்லிப்பளை பிரதேச செயலகத்திலும், பிற்பகல் 1.30 மணிக்கு வேலணை பிரதேச செயலகத்திலும், 10 ஆம் திகதி முற்பகல் 9.00 மணிக்கு சாவகச்சேரி பிரதேச செயலகத்திலும், பிற்பகல் 1.30 மணிக்கு மருதங்கேணி பிரதேச செயலகத்திலும் இதற்கான அமர்வுகள் இடம்பெறவுள்ளன.

அத்துடன் டிசம்பர் 17 ஆம் திகதி காலை 9.00 மணிக்கு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திலும், மாத்தறை ஹக்மன பிரதேச செயலகத்தில் 20 ஆம் திகதி காலை 9.00 மணிக்கும், பிற்பகல் 1.30 மணிக்கு அகுரஸ்ஸ பிரதேச செயலகத்திலும் அமர்வுகள் இடம்பெறவுள்ளன.

ஆலோசனைகளை இம் மாதம் 6 ஆம் திகதிக்கு முன்னர் மின்னஞ்சல் மூலமே அல்லது தபால் மூலமோ அனுப்பி வைக்க முடியும்.

மின்னஞ்சல் முகவரி – ofrsrilanka2018@gmail.com
தாபல் முகவரி – இழப்பீட்டுக்கான அலுவலகம், இல-408, காலி வீதி, கொழும்பு – 03,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here