அம்பாறை மாவட்டத்தில் சீரற்ற கால நிலைக்கு மத்தியில் பரீட்சைக்கு சென்ற மாணவர்கள்

அம்பாறை மாவட்டத்தில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் வெள்ள நிலைமைக்கு மத்தியிலும் திங்கட்கிழமை (02) கல்விப்பொது தராதரப் பத்திர சாதாரணதரப் பரீட்சை மிகவும் அமைதியான முறையில் ஆரம்பமாகியுள்ளது.

கடும் மழைக்கு மத்தியிலும் மாணவர்கள் உரிய வேளைக்கு பரீட்சைக்குத் தோற்றியமை குறிப்பிடத்தக்கது.

இம்முறை க.பொ.த. சாதாரண தர பரீட்சைகள் நாடாளவிய ரீதியில் 4,987 பரீட்சை மத்திய நிலையங்களில், ஏழு இலட்சத்து 17,008 பரீட்சார்த்திகள் பரீட்சைக்கு தோற்றுகின்றனர்.

இன்று (02) ஆரம்பமாகும் இப்பரீட்சைகள் எதிர்வரும் டிசம்பர் 12 ஆம் திகதி நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பரீட்சைகள் காலை 08.30 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளதால், பரீட்சார்த்திகள் அரை மணி நேரத்திற்கு முன்பு பரீட்சை நிலையங்களுக்கு வர வேண்டும் என பரீட்சைகள் ஆணையாளர் நாகயம் சனத் பூஜித, அறிவுறுத்தல் விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாடு முழுவதும் தற்போது காணப்படும் மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களுக்கும் மேலும் தொடரும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here