கோட்டா- பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் சந்திப்பு!


பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி இன்று பிற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடினார்.

ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு நடந்தது. இதன்போது, ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டியதற்கு கோட்டாபயவிற்கு பாகிஸ்தான் அரசு சார்பில், மஹ்மூத் குரேஷி வாழ்த்து தெரிவித்தார்.

பொருளாதார வளர்ச்சி, வர்த்தகம், பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஒத்துழைப்பு ஆகிய துறைகளில் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த பாகிஸ்தானின் ஆர்வத்தை தெரிவித்தார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான நெருங்கிய நட்பையும் ஒத்துழைப்பையும் மேலும் வலுப்படுத்தவும் மேம்படுத்தவும் பாகிஸ்தான் நம்புகிறது என்று வெளியுறவு அமைச்சர் கூறினார்.

நாட்டின் பௌத்த பாரம்பரியத்தை அபிவிருத்தி செய்வதற்கும் பாதுகாப்பதற்கும் இலங்கையுடன் இணைந்து பணியாற்ற தனது அரசாங்கம் தயாராக இருப்பதாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் தெரிவித்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பாகிஸ்தானிற்கு வருமாறு அழைப்பும் விடுத்தார்.

பரஸ்பர நன்மை அடிப்படையில் வர்த்தக மற்றும் முதலீட்டுத் துறையில் தொடர்ச்சியான முன்னேற்றத்தை உறுதி செய்ய வேண்டுமென கோட்டாபய குறிப்பிட்டார்.

இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு எதிரான போராட்டத்தில் இலங்கையை ஆதரிக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி பாகிஸ்தான் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here