இளைஞர்களிற்கு வழிவிட்டு தீவிர அரசியலில் இருந்து ஒதுங்குகிறேன்: சரத் அமுனுகம!


தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கவுள்ளதாக அறிவித்துள்ளார் சரத் அமுனுகம.

தற்போது ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் உறுப்பினராக உள்ள அமுனுகம, எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதில்லையென முடிவெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இளைஞர்களுக்கு வாய்ப்புகளை வழங்க மூத்த அமைச்சர்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அரசியலில் இருந்து விலக வேண்டும் என்று கூறினார்.

“நான் சுதந்திரக்கட்சியில் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டேன், எனவே அந்த ஒப்பந்தத்தின்படி நான் பணியாற்ற வேண்டும். சு.க மற்றும் பெரமுன இடையே பிரச்சினைகள் மற்றும் வேறுபாடுகள் எதுவும் இல்லை. நாங்கள் ஒரே அமைச்சரவையில், ஒரே கட்சியில் இருந்தோம், பேரணிகளை ஏற்பாடு செய்தோம்.  ஆனால் ஸ்ரீ.ல.சு.க.வைப் பற்றி சிந்தித்து ஒரு கூட்டு முறையில் பணியாற்ற வேண்டும் என்று ஒரு செய்தியை பெரமுனவுக்கு தெரிவிக்க விரும்புகிறேன். இப்போது நான் வயதாகிவிட்டேன், நான் அரசியலில் இருந்து விலக வேண்டும். அதுதான் சிறந்தது” என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here