வெள்ளையுடையில் அழுக்குப்படியாமல் ஆனல்ட் எங்கு குப்பை அள்ளினார் தெரியுமா?

யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த நோர்வே வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் ஜென்ஸ் புரோலிச் ஹோல்ட், கடற்கரையோர சுத்திகரிப்பு நிகழ்ச்சித் திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.

யாழ்ப்பாணல் கடல் சூழல் அதிகார சபையின் ஏற்பாட்டில் குருநகர் கடற்கரைப் பகுதியில் இன்று பிற்பகல் 2 மணியளவில் இந்த நிகழ்ச்சித் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

கடற்கரையோர கழிவகற்றல் முகாமைத்துவத்தை உலகம் முழுவதும் முன்னெடுக்கும் நோர்வே அரசின் திட்டத்தை அந்த நாட்டு இராஜாங்க அமைச்சர் இலங்கையில் யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்துவைத்தார்.

யாழ்ப்பாண மாநகர சபை முதல்வர் இமானுவேல் ஆனல்ட், யாழ்.மாவட்ட செயலாளர் நா.வேதநாயகன், யாழ்.மாநகர சபை ஆணையாளர் த.ஜெயசீலன், அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here