சர்சைக்குரிய பெரட்டாசி தோட்ட பாதையின் எஞ்சிய பகுதியை புனரமைப்பது யார்?


புசல்லாவை நகரிலிருந்து பொரட்டசி தோட்டத்திற்கு செல்லும் 26 கிலோமீற்றர் பிரதான பாதை சுமார் 15 வருட காலமாக செப்பனிடப்படாமல் குன்றும் குழியுமாக காணப்படுகின்றது.

இப்பாதையை பாவிக்கும் பதினைந்து தோட்ட பிரிவுகளை சேர்ந்த மக்களும் இப்பகுதியிலுள்ள ஒன்பது பாடசாலைகளுக்கு செல்லும் ஆசிரியர்களும் மற்றும் ஏனைய அரச ஊழியர்கள்¸ தோட்ட உத்தியோகஸ்தர்கள் மாணவர்கள் பெரிதும் பாதிப்புக்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

அத்தோடு இங்கு விவசாயம் செய்யும் விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களை தம்புள்ள, கொழும்பு போன்ற பகுதிகளுக்கு கொண்டு செல்லும் விவசாயிகளும், தோட்டங்களின் தேயிலை உற்பத்திகளை கொழும்பு போன்ற நகரங்களுக்கு கெண்டு செல்லும் தோட்ட நிர்வாகத்தினரும் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

இவ் வீதியின் அவல நிலையால் சேவையில் ஈடுபடுத்தப்பட்டு வந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் சேவை சுமார் 08 வருட காலமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது. பருவகால பயணச் சீட்டைப் பெற்ற பாடசாலை மாணவர்கள் கூட குறிப்பிட்ட தூரம் நடந்து வந்து தனியார் வாகனங்களிலேயே புசல்லாவையில் உள்ள பாடசாலைகளுக்கு செல்கின்றனர்.

இப் பிரதேசத்தில் உள்ள 09 பாடசாலைகளுக்கும் வரும் ஆசிரியர்கள் சரியான போக்குவரத்து வசதி இன்மையால் பாடசாலைகளுக்கு காலை 09, 10 மணிக்கே பாடசாலைகளுக்கு செல்ல வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

காலை புஸ்ஸல்லாவ நகரத்திலிருந்து பெரட்டாசி பிரதேசத்திற்கு 08.15 மணியளவிலேயே தனியார் பஸ் சேவையை ஆரம்பிக்கின்றது. இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் சேவை சுமார் 08 வருட காலமாக இல்லை. இதனால் இப்பிரதேசத்தில் வாழும் தோட்ட தொழிலாளர்களின் பிள்ளைகளின் கல்வியில் பாரிய வீழ்ச்சி காணப்படுவதுடன் ஆசிரியர்கள் அதிபர்கள் உட்பட அரச ஊழியர்களும் பல இன்னல்களை எதிர்நோக்கியும் வருகின்றனர். இதை எந்த அதிகாரிகளும் கண்டுக் கொள்வதில்லை. புஸ்ஸல்லாவ நகரத்தில் உள்ள பாடசாலைகள் அனைத்தும் ஆரபிக்கப்பட்ட பின்னரே மேற்படி தூர பிரதேச பாடசாலை ஆசிரியர்கள் செல்கின்றனர். இவர்களின் இந்த பிரச்சினைக்கு இந்த பாதை ஒரு பாரிய காரணமாக இருக்கின்றது.

பாதையின் அவல நிலை காரணமாக தனியார் பஸ் வண்டிகளும் அடிக்கடி பழுதடைகின்றன. சில நாட்களில் குறித்த நேரத்திற்து பஸ் சேவையில் ஈடுபடுவதில்லை. இதனால் போக்குவரத்து மேற்கொள்வதில் பெரும் பாதிப்புகளை எதிர்நோக்க வேண்டியுள்ளதாக இப்பகுதி மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். சிங்களம் மற்றும் தமிழ்மொழி மூலமான மாணவர்கள் இப்பிரதேசத்திலிருந்து நகர பாடசாலைக்கும் வருகின்றனர். இதனால் மாணவர்களின் கல்வி நிலை பாதிப்புக்கு உள்ளாகின்றது. இதற்கு முன்னர் இரண்டு அரச இ.போ.ச வண்டிகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தன. அவை தற்போது இல்லை. பாதையின் பாதிப்பு நிலைமையே இப் பஸ் சேவை இடை நிறுத்தப்பட்டமைக்கும் பிரதான காரணம் என சுட்டிக்காட்டப்படுகின்றது.

இந்நிலைமை கம்பளை பஸ் டிப்போ முகாமையாளரை தொடர்பு கொண்டு கேட்ட போது, சேவையில் ஈடுபட்டு வந்த இரண்டு பஸ் வண்டிகளும் பழுதடைந்து விட்டன. புதிய பஸ் வண்டிகள் வாங்கும் வரை காத்திருக்கின்றோம். அத்துடன் பாதை பழுதடைந்தமையால் பஸ் சேவையை முன்னெடுக்க முடியாமல் உள்ளதாக தெரிவித்தார்.

கடந்த காலங்களில் இப்பகுதியிலுள்ள வீதிகளிலேயே நான்கு முறை பஸ் விபத்துக்கள் இடம் பெற்றன. இவ் விபத்துக்களில் பாதிப்புக்குள்ளான நூற்றுக்கு மேற்பட்டோர் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுள்ளனர். இதில் பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது. அக்காலப் பகுதியிலும் இப்பாதையை திருத்துவதற்கான வேலைத் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்ட போதும் அவை முறையாக முன்னெடுக்கப்பட வில்லை. இதனால் இங்குள்ள மக்கள் சுமார் 15 கிலோ மீற்றர் தூரம் நடந்து புசல்லாவை பிரதேசத்திற்கு வந்து நுவரெலிய பிரதான பாதையில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டனர்.

கடந்த அரசாங்கத்திற்கு முன்னால் இருந்த மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதி அரசாங்னத்தினால் இந்த பாதை அபிவிருத்தி திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன. அதன் மூலம் இந்த பாதை ஒரு காபட் பாதையாக மாறும் என்ற எண்ணத்தில் மக்கள் சந்தோசத்தில் இருந்தனர். ஆனால் 2015 தேர்தலுக்கு முன்னர் 03 கிலோ மீற்றர் மாத்திரம் பாதை திருத்தம் மேற்கொண்டு, பின்னர் பிரதமர் ரனில் விக்கரமசிங்க அரசாங்கத்தில் கைவிடப்பட்டுவிட்டது.

தொடர்ந்து இந்த அரசாங்கத்தில் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் விஷேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வே.இராதாகிருஸ்ணனின் நிதி ஒதுக்கீட்டில் 1.5 கிலோ மீற்றர் பாதை 29 மில்லியன் செலவில் தற்போது காபட் பாதையாக செப்பனிடப்பட்டு வருகின்றது. நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜின் 35 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் 2 கிலோமீற்றர் இதே பாதை காபட் பாதையாக திருத்துவதற்கு வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டு குத்தகைகாரர்கள் வேறு ஒரு பாதையின் திருத்த வேலையில் இருப்பதால் தற்காலிகமாக வேலைத்திட்டம் இடை நிறுத்தபட்டுள்ளது. தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு உள்ள நிலையில் இதை நிறுத்தி விடாமல் தொடர்ந்து இந்த வேலைத்திட்டம் முன்னனெடுக்கப்பட வேண்டும்.

இந்த பாதை அபிவிருத்தியை முன்னால் ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிகாலத்தில் தற்போது தோட்ட உட்கட்மைப்பு சமூக அபிவிருத்தி அமைச்சராக இருக்கும் ஆறுமுகன் தொண்டமானினால் ஆரம்பித்து வைக்கபட்டு நடைமுறைப்படுத்தபட்டு இருக்கும் வேலையில் ஆட்சி மாற்றத்தினால் கைவிடப்பட்டதாகும். அப்போதே 03 கிலோமீற்றர் பாதை காபட் பாதையாக செப்பனிடப்படடது. தொடர்ந்து மிகுதியான தூரத்தையும் இந்த மக்களின் அவல நிலையை கருத்திற் கொண்டு சிந்தித்து திருத்தி அமைக்க வேண்டியது கட்டாயமானதாகும்

இங்கு வாழும் மக்களின் பிரதான பிரச்சினைகளில் வைத்திய சேவையும் ஒன்றாகும். அவசர சேவையின் போது 20 கிலோ மீற்றர் தூரத்திற்கப்பால் உள்ள புசல்லாவை மாவட்ட வைத்தியசாலையை நாட

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here