சுவிற்சர்லாந்து தூதரகத்தின் முன் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி போராட்டம்!


வெள்ளை வாகனத்தில் கடத்தப்பட்டு, துன்புறுத்தப்பட்டு தகவல்கள் பெறப்பட்ட சுவிற்ர்லாந்து தூதரக பணியாளரை வாக்குமூலம் வழங்க அனுமதிக்க வேண்டுமென வலியுறுத்தி ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அஜித் பிரசன்ன, சுவிற்சர்லாந்து தூதரகத்தின் முன்பாக இன்று (2) உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

தூதர் தூதரகத்திற்குள் மறைந்திருப்பதாகவும், பொலிஸ் விசாரணைகளுக்கு உதவ வேண்டும் என்றும் அவர் கூறினார்.

கடத்தல் தொடர்பாக கூறப்பட்ட கூற்றுக்கள் பொய்யானவை என நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த அறிக்கைகள் இலங்கைக்கு அவமானத்தை ஏற்படுத்தியதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, கடத்தி துன்புறுத்தப்பட்டவர் தமிழ் யுவதியென சமூக வலைத்தளங்களில் குறிப்பிடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here