தூக்கில் தொங்கிய நிலையில் ஆணின் சடலம் மீட்பு!


மஸ்கெலிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாமிமலை அவரவத்தை தோட்டத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆணின் சடலம் ஒன்று இன்று (2) காலை காணப்பட்டது.

சாமிமலை அவரவத்தை தோட்டத்தை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 54 வயதுடைய பாலசுப்பரமணியம் என்பவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது .

குறித்த நபர் நேற்று இரவு உணவு அருந்தி விட்டு நித்திரைக்கு சென்றதாகவும் அதன்பிறகு இன்று காலை கணவர் தூக்கில் தொங்கி இறந்துள்ளதாகவும் அவரது மனைவி தெரிவித்துள்ளார். கடந்த ஆறு மாதங்களாக சுகவீனமுற்ற நிலையில் சிகிச்சை பெற்று வந்தவர் என்றும் தற்க்கொலைக்கான காரணம் தெரியவில்லை என்றும் அவரது மனைவி தெரிவித்தார்

மேலும் தனது இருப்பிடத்தில் இருந்து சுமார் நூறு மீட்டர் தூரத்தில் உள்ள மற்றுமொரு வீட்டின் வெளிப்புற கூரையிலேயே குறித்த நபர் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டது.

சம்பவம் தொடர்பில் மஸ்கெலிய பொலிசாருக்கு கிடைக்கபட்ட தகவலை அடுத்து மஸ்கெலிய உதவி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆனந்த் பிரேமசிறி குழுவினர் சம்பவ இடத்திற்கு வருகை தந்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

(சாமிமலை நிருபர் ஞானராஜ்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here