மன்னாரில் கழுதைகள் வைத்தியசாலை

பிறிஜிங் லங்கா நிறுவனத்தின் அனுசரணையுடன் தாயிலான் குடியிருப்பு மக்களும் இணைந்து மன்னாரில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள கழுதைகள் மருத்துவமனை மற்றும் கல்வி மையம் ஆகியவை இன்று(21) வியாழக்கிழமை காலை உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி, சின்னக்கரிசல் தாயிலான் குடியிருப்பு பகுதியில் கழுதைகள் மருத்துவமனை மற்றும் கல்வி மையம் அமைக்கப்பட்டுள்ளன.
பிரதம விருந்தினராக உலக மிருகங்கள் பாதுகாப்பு அமையத்தின் பிரதிநிதி ஒடார குணவர்த்தன கலந்து கொண்டதோடு, விருந்தினர்களான மன்னார் பிரதேச சபையின் தலைவர் முஹமட் முஜாகிர், உறுப்பினர்கள், நகர சபையின் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மன்னாரில் காயமடைந்த மற்றும் புறக்கணிக்கப்பட்ட கழுதைகளை பராமரிக்கும் இடமாக உருவாக்கப்பட்டுள்ளதோடு, கழுதைகள் பரிசோதிக்கப்பட்டு, சிகிச்சையளிக்கப்பட்டு அதனை பழக்கப்படுத்தி பயனுள்ள நடவடிக்கைகளுக்கு ஈடுபடுத்தும் நடவடிக்கைகளும் குறித்த நிலையத்தில் மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here