அதிமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார் நடிகை நமீதா!


பாஜகவின் தேசிய தலைவா் ஜே.பி.நட்டா தலைமையில், நடிகை நமீதா பாஜகவில் இணைந்துள்ளார்.

குஜராத் மாநிலம் சூரத்தை பூர்வீகமாகக் கொண்டவர் நடிகை நமீதா. 2002 ஆம் ஆண்டு சொந்தம் என்ற தெலுங்கு படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர், எங்கள் அண்ணா படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானார்.

தொடர்ந்து ஏய், இங்கிலீஷ்காரன், வியாபாரி, அழகிய தமிழ்மகன், பில்லா உள்ளிட்ட படங்களில் கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர். தமிழ் ரசிகர்களை மச்சான்ஸ் என்று அழைத்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர்.

தொடர்ந்து மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிப் பபடங்களில் நடித்து வந்த நமீதா பிக்பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக பங்கேற்றார். இதனிடையே கடந்த 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் தேதி மறைந்த முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். ஆனால் அதிமுகவில் இணைந்ததற்கு பின்னரும் பெரும்பாலும் அவர் அரசியல் பொதுக்கூட்டங்களிலோ, பிரசாரக் கூட்டங்களிலோ அதிகம் தலைகாட்டாமல் இருந்து வந்தார்.

தமிழ் சினிமாவின் பிரபல நடிகையான நமீதா கடந்த 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் தேதி அதிமுக கட்சியில் இணைந்தார். தேர்தல் நேரங்களில் அதிமுகவின் பிரபலமான பேச்சாளர்களில் ஒருவராக திகழ்ந்து வந்தவர் நமீதா.

இந்நிலையில், பாஜக தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில்  பிரபல நடிகர் ராதாரவி, நடிகை நமீதா ஆகியோர் அதிமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளனர்.

தமிழக சினிமா பிரபலங்களான நடிகை நமீதா, ராதாரவி இருவரும் இன்று பாஜகவுடன் இணைந்திருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here