மிஸ் இந்தியா அழகியை ஜோடியாக்கிய சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி!


தனது சரவணா ஸ்டோர் விளம்பர படங்களில் நடித்து வந்த சரவணா ஸ்டோர் உரிமையாளர் சரவணன் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படத்தின் தொடக்க விழா இன்று காலை ஏவிஎம் ஸ்டுடியோவில் ஆடம்பரம் இல்லாமல் எளிமையாக நடைபெற்றது.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையில், ஜேடி – ஜெர்ரி இரட்டை இயக்குனர்கள் இயக்கத்தில் சரவணா ஸ்டோர் இந்த படத்தை தயாரிக்கின்றது. ஜேடி-ஜெர்ரி, அஜித் நடித்த உல்லாசம் படத்தை இயக்கிவர்கள்.

இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபு, விவேக் ஆகியோர் நடிக்கின்றனர். கதாநாயகியாக மிஸ் இந்தியா அழகி பட்டம் பெற்ற ஈத்திகா திவாரி நடிக்கின்றார். எளிமையான இந்த பூஜையில் பிரபல இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் கலந்து கொண்டு வாழ்த்தினார்.

டைரக்டர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்து வெளியான எந்திரன் படத்திற்கு ஒளிப்பதிவு செய்த வேல்ராஜ், இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here