வெள்ளிக்கிழமைக்கு முதல் ஞானசார தேரர் வெளியே!

பொதுபலசேனவின் பொதுச் செயலாளர் ஞானசார தேரரை நாளை வெள்ளிக்கிழமைக்குள் சிறையிலிருந்து வெளியே எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று  சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளரும், அமைச்சருமாகிய துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஞானசார தேரரைச் சந்திப்பதற்கு நேற்று சிறைச்சாலைக்கு சென்ற அமைச்சர் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே இதனைத் தெரிவித்தார்.

”நீதிமன்றத்தின் தீர்ப்பை எமக்கு சவாலுக்குட்படுத்த முடியாது. இருப்பினும், எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்குள் தேரரை வெளியே எடுப்பதற்கு நாம் நடவடிக்கை எடுப்போம். ஞானசார தேரர் சிறையில் மகிழ்ச்சியாக உள்ளார். அவர் என்ன ஆடைய அணிந்திருந்தார் என்பதை அவர் வெளியே வந்த பின்னர் அறிவிப்பார்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஊடகவியலாளரின் மனைவியை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் ஞானசாரருக்கு ஒரு வருடங்கள் கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here