உயிரணுக்களின் உற்பத்தி, தாம்பத்திய ஆர்வத்தை அதிகரிக்க செய்யும் காமவிருத்தி கஞ்சி

வெண்பூசணிக்காய் கருங்குருவைக் கஞ்சி

தேவையான பொருட்கள்

கருங்குருவை அரிசி – 100 கிராம்
வெண்பூசணிக்காய் – 50 கிராம்
பாதாம் பருப்பு – 10
மிளகு – 5 கிராம்

செய்முறை

முதலில் கருங்குருவை அரிசியை நொய்யாக்கி 12 மணி நேரம் ஊற வைக்கவும்.
வெண் பூசணிக்காயை நன்கு கழுவி அதனை தோலோடு, சதை மற்றும் விதை அனைத்தையும் எடுத்து மிக்ஸியில் போட்டு அதில் பாதாம் பருப்பு மற்றும் மிளகு சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து ஜூஸாக்கிக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதில் ஊற வைத்துள்ள கருங்குருவை நொய்யைச் சேர்த்து வேக வைக்கவும்.

அரிசி நன்கு வெந்து கஞ்சி பதம் வந்தவுடன் அதில் அரைத்து வைத்துள்ள வெண் பூசணி ஜூஸை சேர்த்து நன்கு கலக்கி ஒரு கொதி வந்ததும் இறக்கி வைத்து அருந்தவும்.

பயன்கள்

இந்தக் கஞ்சி உயிரணு குறைபாடு உள்ளவர்களுக்கு அற்புதமான உணவு.

தாம்பத்தியத்தில் ஆர்வம் இல்லாதவர்களுக்கு ஆர்வத்தை தூண்டி தாம்பத்திய உணர்வை அதிகரிக்க உதவும் கஞ்சி.

படுக்கப் போகும் முன்

வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப்போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு

அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும்.

பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here