தற்கொலை முயற்சி பற்றி மனம் திறந்த சாய் சக்தி!


’நாதஸ்வரம்’ தொடர் மூலம் பிரபலமான நடிகர் சாய் சக்தி, பல்வேறு சீரியல்களிலும், சில திரைப்படங்களிலும் நடித்து வந்த நிலையில், திடீரென்று தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் பிறகு சில ஆண்டுகள், எந்த டிவி தொடர்களிலும் நடிக்காமல் இருந்தவர், சாப்பாட்டுக்கே வழியில்லாமல் கஷ்ட்டப்படுவதாக தகவல் வெளியானது.

ஆனால், அதை மறுத்த நடிக சாய் சக்தி, தான் சில ஆண்டுகள் நடிகாமல் இருந்தது உண்மை என்றாலும், சாப்பாட்டுக்கே கஷ்ட்டப்படும் நிலைக்கு செல்லவில்லை, மன ரீதியாக பாதிக்கப்பட்டிருந்தேன். அதில் இருந்து மீண்டு வந்து தற்போது மீண்டும் நடிக்க தொடங்கியிருக்கிறே, என்று விளக்கம் அளித்தார்.

இந்த நிலையில், தான் எதற்காக தற்கொலை முயற்சியில் ஈடுபட்டேன், என்பது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியிருக்கும் சாய் சக்தி, அவரது மனைவியின் செய்த கொடுமையால் தான் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாராம்.

வாழ்க்கையில் பலவிதமான கஷ்ட்டங்களை எதிர்கொண்ட சாய் சக்திக்கு, அவரது மனைவி மூலம் தான் 90 சதவீதம் பிரச்சினைகள் வந்ததாம். மேலும், மனைவி பிரிந்து சென்ற பிறகு தனிமையில் இருந்ததும், பொருளாதார ரீதியிலான பிரச்சினைகளினாலும், மன ரீதியாக பாதிக்கப்பட்டவர் தற்கொலை செய்துக்கொள்ள முயன்றாரம்.

அவர் குடியிருந்த வீட்டுக்கு எதிரே இருந்தவர்கள் தான் அவரை தற்கொலையில் இருந்து காப்பாற்றினார்களாம். தற்போது பழைய நிலைக்கு திரும்பியுள்ள சாய் சக்தி, பல டிவி நிகழ்ச்சிகளில் நடித்து வருவதோடு, தன்னை மக்களிடம் கொண்டு சேர்ந்த ‘நாதஸ்வரம்’ சீரியல் இயக்குநர் திருமுருகன் இயக்கும் தொடரில் மீண்டும் நடிக்க விரும்புவதாகவும், தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here