உலகத்தின் ஒரேயொரு முட்டாள் ஜப்பான் பிரதமரே!


ஏவுகணை சோதனை குறித்து விமர்சித்ததற்காக ஜப்பான் பிரதமர் ஹின்சே அபேவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது வடகொரியா.

வடகொரியா வியாழக்கிழமையன்று குறுகிய தூரம் சென்று இலக்கை தாக்க கூடிய இரண்டு ஏவுகணை சோதனைகளை நடத்தியது. வடகொரியாவின் ஏவுகணை சோதனையை ஜப்பான் பிரதமர் ஷின்சே, சர்வதேச மற்றும் ஜப்பானுக்கான அச்சுறுத்தல் என்று விமர்சித்திருந்தார்.

இந்த நிலையில் ஜப்பான் பிரதமர் ஷின்சே அபேவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது வடகொரியா.

இதுகுறித்து வடகொரியா வெளியிட்ட செய்தி குறிப்பில், “ஜப்பான் பிரதமர் ஷின்சே அபே இந்த உலகத்தின் ஒரே ஒரு முட்டாள். அபே உண்மையான ஏவுகணை சோதனையை பற்றி அறியாமல் இருக்கிறார். எதிர்காலத்தில் இதனை பற்றி அறிவார்” என்று குறிப்பிட்டுள்ளது.

முன்னதாக உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. வடகொரியாவின் இந்த நடவடிக்கையை அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன.

ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்கா தலைமையில் வடகொரியாவின் மீது புதிய பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டன. எனினும், அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளைப் பொருட்படுத்தாமல் வடகொரியா அவ்வப்போது ஏவுகணை சோதனைகளை நடத்தி வந்ததது.

இந்நிலையில் தென்கொரியாவில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வடகொரியா பங்கேற்றது. அதுமுதல் வடகொரியா – தென்கொரியா உறவில் இணக்கம் காணப்பட்டு ட்ரம்ப் – கிம் இடையே சந்திப்பு நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக, வடகொரிய தலைவர் கிம், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கலந்துகொண்ட உச்சி மாநாடு வியட்நாம் தலைநகரம் ஹானோயில் நடைபெற்றது. இதில் இரு நாடுகளுக்கிடையே எந்த ஒப்பந்தமும் எட்டப்படாமல் தோல்வியில் முடிந்தது.

இந்நிலையில் அமெரிக்கா – வடகொரியா இடையே அணு ஆயுத சோதனை தொடர்பான பேச்சுவார்த்தைக்கு முயற்சிகள் நடந்து வரும் நிலையில் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here