லண்டன் தாக்குதல்தாரி பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகளிடமிருந்து நிதி பெற்றவர்!


பிரிட்டன் தலைநகர் லண்டனில் கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தியவர் பாகிஸ்தான் தீவிரவாத முகாமிடமிருந்து நிதியுதவி பெற்று வந்தவர் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

லண்டனில் உள்ள பிரசித்தி பெற்ற லண்டன் பாலத்தில் சென்று கொண்டிருந்த பொதுமக்கள் மீது மர்ம நபர் ஒருவர் திடீரென கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தியுள்ளார். இதில் சரமாரியாக அவர் கத்தியால் குத்தியதில் இருவர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர்.

இதையடுத்து அங்கு விரைந்து சென்ற பொலிசார் தாக்குதல் நடத்திய மர்ம நபரை பாலத்தின் அருகே துப்பாக்கியால் சுட்டு மடக்கிப் பிடித்தனர். இதில் அவர் உயிரிழந்தார். இதுகுறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் தாக்குதல் நடத்தியவர் பெயர் உஸ்மான் கான் (28) என்றும், அவர் தனது இளமை காலத்தை பாகிஸ்தானில் செலவழித்திருக்கிறார் என்பதும் தெரிய வந்தது. பின்னர் லண்டன் வந்திருக்கிறார்.

தீவிரவாத கருத்துகளை இணையத்தில் பரப்புவதற்காக பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகளிடமிருந்து நிதி பெற்று வந்திருக்கிறார் உஸ்மான். அவர் அல்கய்தா தீவிரவாத கொள்கை இயக்கத்தால் ஈர்க்கப்பட்டிருந்தார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here