பாகிஸ்தான் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!


பாகிஸ்தான் அணியுடனான இரண்டு போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடருக்கான 16 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

தினேஸ் சந்திமால் மற்றும் அஞ்சலோ மத்யூஸ் ஆகியோர் நீண்ட இடைவெளிக்கு பின்னர் அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

அணித்தலைவர் திமுத் கருணாரட்ண, ஓசத பெர்ணான்டோ, குசல் மெண்டிஸ், குசல் ஜனித் பெரேரா, லஹிரு திரிமன்ன, தனஞ்சய டி சில்வா, நிரோஷன் திக்வெல்ல, தில்ருவன் பெரேரா, லசித் அம்புல்தெனிய, சுரங்க லக்மால், லஹிரு குமார, விஷ்வ பெர்ணான்டோ, கசுன் ராஜித்த மற்றும் லக்‌ஷான் சந்தகென் ஆகியோர் ஏனைய வீரர்களாக பெயரிடப்பட்டுள்ளனர்.

இரண்டு போட்டிகளை கொண்ட இந்த டெஸ்ட் தொடர்பில் கலந்து கொள்வதற்காக எதிர்வரும் 08 ஆம் திகதி இலங்கை அணி பாகிஸ்தானிற்கு பயணமாகிறது. 11 ஆம் திகதி முதலாவது டெஸ்ட் ஆரம்பிக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here