அக்கரைப்பற்றில் போராட்டம்

அக்கரைப்பற்று நகரப்பகுதியில் கதவடைப்பும், கண்டன போராட்டமும் தற்பொழுது நடந்து வருகிறது.

பொலிசாரால் நேற்று கைது செய்யப்பட்ட தமிழ் இளைஞர்களை விடுவிக்க கோரியே இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது.

அந்த பகுதியிலுள்ள காணியொன்றை சட்டவிரோதமாக அபகரிக்க முஸ்லிம் நபர் ஒருவர் முயன்றதாகவும், அவர் அமைத்த சட்டவிரோத வேலியை இளைஞர்கள் அடித்து வீழ்த்தியதாகவும் கூறப்படுகிறது. அவர் கொடுத்த முறைப்பாட்டின் அடிப்படையில் இளைஞர்கள் சிலர் பொலிசாரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களை விடுவிக்க வலியுறுத்தியே அக்கரைப்பற்றில் கதவடைப்பும் கர்த்தாலும் நடைபெறுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here